தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம், இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மாயாவின் ஏற்பாடுகளை பார்த்து ரகுராம் கோபப்பட ஜானகிக்கு மாயாவுக்கு உண்மைகள் எதுவும் தெரியாது என்று தெரிய வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, ஜானகி ரகுராமிடம் மாயாவுக்கு உண்மைகள் தெரியாது என சொல்ல வர அதை கேட்க மறுக்கும் ரகுராம் கல்யாணமாகி இத்தனை வருஷமாகியும் கல்யாண நாளில் உனக்கு பிடித்த எதையும் வாங்கி கொடுத்து சந்தோசப்படுற சூழ்நிலையில் நாம இல்ல என்று சொல்லி வருத்தப்படுகிறார்.
மறுபக்கம் மாயா டல்லாக இருக்க சீனு இந்த கல்யாண நாளில் மறக்க முடியாத பல விஷயங்கள் நடந்திருக்கு. அதையெல்லாம் மறக்க முடியாமல் தான் இருக்காங்க என ஆறுதல் கூறுகிறான். மறுநாள் மாயாவும் தனமும் காலேஜ் முடித்து வெளியே வரும் போது சில ஆண்கள் பேட்மிட்டன் விளையாடி கொண்டிருக்க அதை பார்த்த தனம் சீனு வரும் வரை அவங்க விளையாடுறதை பார்க்கலாம் என சொல்லி மாயாவை அழைத்து செல்கிறாள்.
அப்போது பால் வெளியே வந்து விழ தனம் அதை எடுத்து கொண்டு செப்பலை கழட்டி விட்டு பிளே கிரவுண்டுக்குள் நுழைய அவர்கள் நீ எதுக்கு உள்ளே வர என தனத்தை கிண்டலடிக்க மாயா சண்டைக்கு போக தனம் சண்டை வேண்டாம் என அழைத்து வந்து விடுகிறாள். அதன் பிறகு சீனு வந்ததும் அவனிடம் விஷயத்தை சொல்ல மாயா நீ எதுக்கு சும்மா வந்த விளையாடி காட்ட வேண்டியது தானே என்று சொல்ல மாயா ஷாக் ஆகிறாள்.
பிறகு தனம் பேட்மிட்டன் விளையாட தெரிந்தவள் என்பதை அறியும் மாயா அவளை கிரவுண்டுக்கு அழைத்து சென்று இவளோட விளையாடி ஜெயித்து காட்டுங்க என சவால் விடுகிறாள். கோச் கார்த்திக் என்ட்ரி கொடுத்து என்ன பிரச்சனை என விசாரித்து தீர்த்து வைக்க முயற்சி செய்ய மாயா தனத்தை விளையாட விடணும் என அடம் பிடிக்க பிறகு தனமும் விளையாடி வெற்றி பெற கிண்டலடித்து பாய்ஸ் மன்னிப்பு கேட்கின்றனர்.
வீட்டிற்கு வந்த தனம் பேட்மிட்டான் விளையாடி ஜெயித்த மெடல், கப்புகள் எல்லாம் ஒரு பெட்டிக்குள் இருப்பதாய் காட்டுகிறாள், இது எதுவும் அப்பாவுக்கு தெரியாது எனவும் சொல்கிறாள். சீனு தான் எல்லாத்தையும் கற்று கொடுத்ததாக சொல்கிறாள். மேலும் சந்தியா பேட்மிட்டன் பிளேயர் என்ற விஷயமும் அதனால் தான் ஜானகி பேட்மிட்டன் கற்று கொள்ள வைத்ததும் தெரிய வர மாயா சந்தியா போட்டோ முன்பு நின்று தனத்திற்கு துணையாக இருப்பேன் என்று முடிவு செய்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும் காண