தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. கடந்த வாரம் ஷக்தி கார்த்திக், ப்ரியா கல்யாணத்தை நிறுத்த முயற்சி செய்ய அவளது முயற்சி தோல்வியை தழுவிய நிலையில் வரும் நாட்களில் இந்த சீரியலில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, ஷக்தியால் எதுவும் செய்ய முடியாமல் போகும் நிலை உருவாக கார்த்திக், ப்ரியா கல்யாணம் நடந்து விடும் என எதிர்பார்க்க திடீரென ப்ரியா கடத்தப்படுகிறாள். அவளை கடத்திய பூஜை ப்ரியாவை கொன்று விடுகிறாள். ஆனால் பழி அனைத்தும் ஷக்தி மீது விழுந்துவிடுகிறது.
இதனையடுத்து ப்ரியாவை கொன்ற குற்றத்திற்காக ஷக்தி கைது செய்யப்படுகிறாள். இதனால் பூஜா சந்தோஷமடைகிறாள். சக்தியை நீதி மன்றத்தில் ஆஜர் செய்ய அங்கு வரும் வெற்றி ப்ரியாவை கொன்றது நான் தான் என்று வான்டடாக குற்றத்தை ஒப்பு கொள்ள ஷக்தி விடுதலை செய்யப்படுகிறாள்.
வெளியே வந்த ஷக்தி, ப்ரியாவை கொன்றது யார்? என்று ஆதாரங்களை சேகரிக்க தொடங்குகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? ஷக்தி வெற்றியை எப்படி வெளியே கொண்டுவர போகிறாள் என்ற அதிரடியான கதைக்களத்துடன் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க
TN Bus Strike: நீதிபதி தந்த அட்வைஸ்! ஸ்டிரைக்கை தற்காலிகமாக திரும்ப பெற்ற போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள்!
ரன் எடுக்க ஓடியபோது ஏற்பட்ட மாரடைப்பு.. மைதானத்தின் நடுவே சரிந்து விழுந்து உயிரிழந்த நபர்!
Vijayakanth: ”என்னால் இதைத்தான் செய்ய முடியும்” – விஜயகாந்துக்காக தயாராக இருக்கும் ராகவா லாரன்ஸ்