zee tamil idhayam serial february 20th episode update


தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஆதி வாசுவாக மாறி ரத்னத்தை அப்பா என அழைத்து அல்வாவை எடுத்து வந்து கொடுக்க வாசு வாங்கி கொடுக்கும் அதே ஆல்வா என்பதால் எமோஷனான நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது நலங்கு வைப்பதற்காக பாரதிக்கு லதா அலங்காரம் செய்து அழைத்து வர பாரதி கண்ணீருடன் வந்து உட்காருகிறாள். அடுத்து நலங்கு வைக்கும் நிகழ்ச்சி தொடங்க ஒவ்வொருவராக நலங்கு வைக்க தொடங்குகின்றனர். எல்லாரும் நலங்கு வைத்ததும் ஆதி பாரதி நலங்கு வைக்கிறான். தமிழ் பாப்பாவை கூப்பிட மீண்டும் அவள் பயந்து போய் துரை அருகே சென்று நின்று விடுகிறாள்.
இதனையடுத்து எல்லாரும் சாப்பிட உட்காருகின்றனர், பாரதியும் சாப்பாடு பரிமாற ஆதி அருகே வந்ததும் அவளால் பரிமாற முடியாமல் கண்ணீருடன் ரூமுக்குள் சென்று விடுகிறாள். இதனையடுத்து மீண்டும் ஆதி வாசுவாக மாறுகிறான். வாசுவை போலவே நடந்து கொள்ள யாருக்கும் எதுவும் புரியாமல் இருக்கிறது.
சாப்பிட்டு முடித்து கை கழுவ மரகதம் இந்தாங்க தம்பி என்று கை துடைக்க டவலை கொடுக்க ஏய் தாய் கிழவி. ஒரு குடிகாரனுக்கு கட்டி கொடுத்து ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுக்க பாக்கறியா என்று கேட்க மரகதம் வாசு பேசுவது போலவே இருக்க அதிர்ந்து போய் நிற்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இதயம் சீரியலின் இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க 
Samantha: நான் நிம்மதியா இருந்து ரொம்ப நாளாச்சு… வருத்துடன் பேசிய சமந்தா!
Nitish Bharadwaj: விவாகரத்து செய்ய பணம் கேட்டார்.. மகாபாராத நடிகர் மீது மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு

மேலும் காண

Source link