Tamanna Vijay Varma: தமன்னாவுடன் முதன்முதலாக டேட்டிங் சென்றது குறித்து நடிகர் விஜய் வர்மா பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நடிகை தமன்னா:
மாடலிங் உலகில் நுழைந்து தொடர்ந்து 2005ஆம் ஆண்டு ‘சாந்த் சே ரோஷன் செஹரா’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார் தமன்னா. 2006ஆம் ஆண்டு ‘கேடி’படத்தின் மூலம் தமன்னா தமிழ், தெலுங்கு சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். ஆரம்ப காலத்தில் இவர் நடித்த சில படங்கள் வணிகரீதியாக தோல்வியுற்ற நிலையில், கல்லூரி படத்தின் மூலம் தனது நடிப்பால் கவனமீர்த்தார்.
அதன் பின்னர் தனுஷ், சூர்யா, ராம் சரண், பிரபாஸ் என டாப் நடிகர்களுடன் நடிக்கத் தொடங்கி, கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு சினிமாக்களின் டாப் நடிகைகளுள் ஒருவராக வலம் வருகிறார். இதனை அடுத்து, அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
தமிழில் வாய்ப்புகள் குறைந்தாலும், பாலிவுட் அவரது கேரியருக்கு கைக் கொடுத்தது. சமீபத்தில், பப்ளி பவுன்சர், லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படங்களில் நடித்திருந்தார். இதன்பின், தீலிப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு வந்தார். இந்த படத்தில் காவாலா என்ற ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடிய நிலையில், தனது கேரியரில் உச்சத்துக்கே சென்றார்.
தமன்னாவை காதலிக்க தொடங்கியது எப்போது?
இதற்கிடையில், நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக நடிகை தமன்னா தெரிவித்திருந்தார். தங்களுக்கு இடையேயான இந்த உறவானது லஸ்ட் ஸ்டோரிஸ் 2 சீரிஸின் படப்பிடிப்பின் போது தொடங்கியதாக கூறியிருந்தார். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், டேட்டிங் சென்றது குறித்து நடிகர் விஜய் வர்மா பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், “லஸ்ட் ஸ்டோரிஸில் நானும் தமன்னாவும் நடிக்கும்போது டேட்டிங் செல்ல தொடங்கவில்லை. நாங்கள் ஒரு பார்ட்டி வைக்க விரும்பினோம். அந்த பார்ட்டில் நான்கு பேர் மட்டுமே கலந்து கொண்டோம்.
அப்போது, தமன்னாவிடம் உங்களுன் அதிக நேரம் செலவிட விரும்புகிறேன் என்று சொன்னேன். இந்த நாளில் இருந்து 20 முதல் 25 நாளைக்கு பிறகு நாங்கள் டேட்டிங் சென்றோம்” என்றார் விஜய் வர்மா. முன்னதாக, ரிலேஷன்ஷிப் குறித்து தமன்னா கூறுகையில், “எனக்கு விஜய் வர்மாவுக்கு இடையேயான உறவு ரொம்பவே இயல்பானது.
விஜய் வர்மா தன்னை அவருக்கு ஏற்றது போன்று மாற்றவில்லை. என்னை அப்படியே ஏற்றுக் கொண்டார். எனக்கு சந்தோஷமான இடம் என்றால் அது விஜய் வர்மா தான். எனக்கு ஆதரவாக இருக்கிறார். என்னை மாற்ற நினைக்காத விஜய்யை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது” என்றார் தமன்னா.
மேலும் படிக்க
Kamal Haasan: சீனியர் பிரபுதேவா சுந்தரம் மாஸ்டருடன் ஒற்றைக் கால் ஸ்டெப்.. கமல்ஹாசன் நெகிழ்ச்சி!
மேலும் காண








































































































