Siragadikka Aasai Written Update:சிறகடிக்க ஆசை சீரியைன் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.
பார்க் நண்பர் மனோஜை ஒரு சாமியாரிடம் அழைத்துச் செல்கிறார். அந்த சாமியார் “நம்பிக்கை இருக்கணும் உனக்கு நம்பிக்கைய விட படிச்சவன்ற தலைக்கணம் தான் அதிகம் இருக்கு. அது முதல்ல இறங்கணும். உனக்குத் தேவை பணம் தானே போய் பிச்சைஎடு. சொல்றத மட்டும் கேளு. நான் சொல்ற கோயில்ல போய் சாயந்தரம் 6 மணி வரை பிச்சை எடு. யாரு வந்தாலும் சாயந்தரம் 6 மணி வரைக்கும் நீ வெறும் வயிறா தான் இருக்கணும்”. என்று சொல்கிறார்.
மனோஜ் தனது பார்க் நண்பரிடம் “பணம் கிடைக்கும்னு சொன்னிங்க அவரு பிச்சை எடுக்க சொல்றாரு” என்று சொல்கிறார். அதற்கு அவர் “அதான் ப்ரோ பரிகாரமே” என்று சொல்கிறார். பின் மனோஜ் பிச்சைக்காரன் கெட்டப்பில் உட்கார்ந்து பிச்சை எடுக்கிறார். அப்போது அங்கு வழக்கமாக உட்கார்ந்து பிச்சை எடுப்பவர்கள் மனோஜை விரட்டுகின்றனர். “ஒழுங்கா போரியா இல்லை யூனியன்ல கம்ளைண்ட் பன்னவா” என கேட்கின்றனர்.
“இல்ல சார் நான் பரிகாரத்துக்காக பிச்சை எடுக்குறேன் இன்னைக்கு ஒரு நாள் தான்” என்று சொல்கிறார். “நல்லா சத்தம் போட்டு கேளுயா அப்போதான் பிச்சை போடுவாங்க’ என்று பக்கத்தில் அமர்ந்திருப்பவர் சொல்லுகிறார். பின் அவர் ஹோட்டலில் சாப்பாடு ஆர்டர் செய்கிறார். மனோஜையும் சாப்பிட அழைத்துச் செல்கிறார். பின் மனோஜிக்கு ஒரு பிரியாணி பார்சலை தருகிறார். அப்போது மனோஜின் பார்க் நண்பர் மனோஜிக்கு கால் செய்கிறார். “சாமியார் சாப்பிட கூடாதுனு சொல்லி இருக்காரு இல்ல. சாப்டா பரிகாரம் பலிக்காது” என்று சொல்கிறார். பின் மனோஜ் அந்த பிரியாணி பார்சலை திருப்பி கொடுத்து விட்டு மீண்டும் பிச்சை எடுக்க செல்கிறார்.
அப்போது மீனா அந்த கோயிலுக்கு வருகிறார். மீனாவை பார்த்ததும் மனோஜ் பயந்து துண்டை கொண்டு முகத்தை மூடி கொள்கிறார். மீனா மனோஜை கடந்து சிறிது தூரம் சென்று மீண்டும் மனோஜை நோக்கி திரும்பி வருகிறார். மனோஜை அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டு இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் காண