Vijay spoke to Ajith on the phone actor kavin responded to the rumours cinema headlines | Cinema Headlines: அஜித்திடம் போனில் பேசிய விஜய்! வதந்திக்கு பதிலடி தந்த நடிகர் கவின்


Vishal – Hari: “ரத்னம் என் 17ஆவது படம்: விஷாலின் நடிப்பு பேசப்படும்” – இயக்குநர் ஹரி நம்பிக்கை!
ரத்னம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய, இயக்குநர் ஹரி பேசுகையில் “இது எனது 17வது படம், விஷாலுடன் மூன்றாவது படம், தேவி ஸ்ரீ பிரசாத்துடன் ஆறாவது படம். ‘சிங்கம்’ உள்ளிட்ட எனது முந்தைய படங்களுக்கு எவ்வாறு அருமையாக பாடல்களை வழங்கினாரோ அதைவிட சிறந்த பாடல்களை ‘ரத்னம்’ படத்திற்கு வழங்கியுள்ளார். ஆறு பாடல்களும் மிகவும் அருமையாக வந்துள்ளன. 
விஷாலுடன் இணைந்து ஒரு முழு நீள ஆக்ஷன் திரைப்படத்தை வழங்க வேண்டும் என்று எண்ணினேன். ‘தாமிரபரணி’, ‘பூஜை’ உள்ளிட்ட படங்கள் ஆக்ஷன் நிறைந்தவை என்றாலும் அவற்றில் குடும்ப செண்டிமெண்ட் போன்ற இதர விஷயங்களும் இருந்தன. ‘சிங்கம்’, ‘சாமி’ போன்ற ஆக்ஷன் ததும்பும் திரைப்படமாக’ ரத்னம்’ இருக்கும். இப்படத்திற்காக விஷால் கடுமையாக உழைத்துள்ளார். அவரது நடிப்பு பேசப்படும். அனைவருக்கும் நன்றி” என்றார். மேலும் படிக்க
Kavin: லேட்டா வந்தேனா.. கல்லூரி விழாவில் தன்னைப் பற்றிய வதந்திக்கு பதிலடி தந்த நடிகர் கவின்!
சின்னத்திரை சீரியல்களில் தொடங்கி பிக்பாஸ் வழியாக ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்து, இன்று தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் முன்னணியில் இருந்து வருபவர் நடிகர் கவின். பல தடைக்கற்கள், விமர்சனங்கள் தாண்டி படிப்படியாக நடிப்புப் பயணத்தில் வளர்ந்து, இன்று தனக்கென ஒரு தனி இடத்தை அடைந்திருக்கும் கவினுக்கு என ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது.
குறிப்பாக சென்ற ஆண்டு வெளியான டாடா திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்து அடுத்தடுத்த நல்ல நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ள நிலையில், திரையுலகினரும் ரசிகர்களும் அவரது வெற்றிகரமான திரைப் பயணத்தை எதிர்நோக்கி ஆவலுடன் காத்துள்ளனர்.மேலும் படிக்க
Kaathu Karuppu Kalai: விஜய்க்கு போட்டி.. ஹீரோவாகும் காத்து கருப்பு கலை.. கலாய்த்த வெங்கட் பிரபு!
காத்து கருப்பு கலையரசன் ரத்தபூமி என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். இதன் படப்பூஜை நேற்று நடைபெற்றது. பின்னர் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது வெளியான வீடியோவில்,  அப்படத்தின் இயக்குநர் பேசும்போது, ‘தமிழ் சினிமாவின் அடுத்த தளபதி இவர் தான். ஆக்‌ஷன் ஹீரோவாக வரக்கூடிய எல்லா தகுதியும் இவரிடம் உள்ளது. இந்த படத்துக்கு ரத்தபூமி என ஏன் டைட்டில் வைத்துள்ளேன். என்ன காரணம் என கேட்டால், தமிழ் சினிமாவில் தளபதி என்ற இடம் காலியாக உள்ளது. இவர் தான் அடுத்த தளபதி” என கூறினார். மேலும் படிக்க
Mansoor Ali Khan : நானும் இளைஞன்தான்.. நான் மந்திரி ஆகக்கூடாதா? கேள்விகளை அள்ளி வீசிய மன்சூர் அலிகான்
தமிழ் சினிமாவில் வில்லன், ஹீரோ, இயக்குநராக கலக்கிய நடிகர் மன்சூர் அலிகான் அவ்வப்போது சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் எதையாவது பேசி ஒரு பரபரப்பை ஏற்படுத்திவிடுவார். தற்போது வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவர் மன்சூர் அலிகான். அந்த வகையில் மக்களை சந்தித்து தன்னுடைய பிரச்சாரத்தை வேலூரில் துவங்கினார். அப்போது அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தடாலடியாக பதிலளித்து அனைவரையும் கதிகலங்க செய்துவிட்டார். மேலும் படிக்க
AK – Vijay: மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நடிகர் அஜித் : ஃபோனில் என்ன பேசினார் விஜய்?
நடிகர் அஜித் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில் நடிகர் அஜித் குமாரின் உடல் நலம் குறித்து நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்துள்ளார். மேலும் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க

மேலும் காண

Source link