இன்றைய இளைஞர்களின் ஹார்ட் த்ரோபாக இருந்து வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. தற்போது தில் ராஜூ தயாரிப்பில் பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர், திவ்யன்ஷா கவுசிக், அஜய் கோஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘ஃபேமிலி ஸ்டார்’. ஏற்கனவே விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம், சர்காரு வாரி பாட்டா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பரசுராம் என்பது குறிப்பிடத்தக்கது.
ரொமான்டிக் ஃபேமிலி டிராமாகவாக உருவாகியுள்ள ‘ஃபேமிலி ஸ்டார்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 5ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ள நிலையில் அப்படக்குழுவினர் பிரஸ் மீட் ஒன்றில் கலந்து கொண்டு பத்திரிகையர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.
கூடிய விரைவில் திருமணம்:அப்போது விஜய் தேவரகொண்டாவிடம் நேரடியாக அடுத்து எப்போது தமிழ் சினிமாவில் நடிப்பார் என கேட்கப்பட்டதற்கு தற்போது அவர் பல தமிழ் திரையுலக இயக்குநர்களிடம் ஸ்க்ரிப்ட்களை கேட்டு வருவதாகவும் விரைவில் தமிழ் படத்தில் நடிப்பார் என்றும் தெரிவித்து இருந்தார்.
திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில் “எனக்கும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை எல்லாம் உள்ளது. ஆனால் 2024ல் கிடையாது. கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்வேன்” என தெரிவித்து இருந்தார்.
உங்களின் திருமணம் காதல் திருமணமா அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமா? என கேட்கப்பட்டது. அதற்கு மிகவும் தெளிவாக பதில் அளித்த விஜய் தேவரகொண்டா ” நிச்சயம் காதல் திருமணம் தான். ஆனால் அந்த பெண்ணை என்னுடைய பெற்றோர்களும் விரும்ப வேண்டும்” என தெரிவித்து இருந்தார்.
நேரடியாக தமிழ் திரைப்படத்தில் நடிக்கும் போது எந்த ஹீரோயின் உங்களுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த விஜய் தேவரகொண்டா ” உங்களின் ஃபேவரட் ஹீரோயின் யார் என்றாலும் ஒகே தான். உங்களுக்கு ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக வேண்டும் என்றாலும் எனக்கு ஒகே தான். அவருடன் நான் நடித்தது மிகவும் நன்றாக இருந்தது. தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு அவரை மிகவும் பிடிக்கும். அவர் மிகவும் நல்லவர், ஸ்மார்ட் கேர்ள், நல்ல நடிகை. அவரை திரையில் பார்ப்பது மிகவும் நன்றாக இருக்கும்” என்றார்.
தில் ராஜு இதற்கு பதிலளிக்கையில் “விஜய் என்ன தான் தேர்ந்து எடுத்தாலும், இயக்குநரும் தயாரிப்பாளரும் தான் அதை முடிவு செய்ய வேண்டும். தற்போது ராஷ்மிகா மந்தனா மும்பையில் இருக்கிறார். மும்பை நடிகைகள் எல்லோரும் எவ்வளவு பிஸியாக இருக்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும்” என பதில் அளித்தார்.
மேலும் காண