vijay antony controversial speech in romeo movie press meet | Vijay Antony: “ஜீசஸ் கூட குடிச்சிருக்காரு.. மது நீண்ட நாட்களாகவே இருக்கு”


ஆண் குடிப்பது தப்பு என்றால் பெண் குடிப்பதும் தப்பு தான்.இதில் வேறுபாடு என்பதெல்லாம் ஒன்றுமில்லை என நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். 
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராக வளர்ந்தவர்களில் விஜய் ஆண்டனியும் ஒருவர். இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பல துறைகளிலும் தனது திறமைகளை நிரூபித்த அவர், தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது “ரோமியோ” என்ற பெயரிலான படத்தை நடித்துள்ளார்.இந்த படத்தில் மிருனாளினி ரவி ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, விடிவி கணேஷ், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி, தலைவாசல் விஜய் என பலரும் நடித்துள்ளார். விநாயக் வைத்தியநாதன் இயக்கியுள்ள ரோமியோ படம் ஏப்ரல் 11 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகிறது. 
முன்னதாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், தொடர்ந்து பாடல்களும் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே ரோமியோ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தனர். இதில் விஜய் ஆண்டனி அளித்த பதில் ஒன்று இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. 
கேள்வி: தமிழ்நாட்டில் வந்து மது ஒழிக்க வேண்டும் என சொல்கிறார்கள். முதல் இரவு என்பது வாழ்க்கையை தொடங்கும் விஷயம். ஆனால் ரோமியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பாலும் பழத்துக்கு பதிலாக சரக்கு ஊற்றுவது போல அதுவும் பெண் கையில் இருப்பது போல போஸ்டர் வந்துச்சே? 
விஜய் ஆண்டனி: இங்க வந்திருப்பவர்களில் பாதி பேர் குடிப்பீர்கள் என நினைக்கிறேன். இதில் ஆண், பெண் என வேறுபாடு பார்க்க வேண்டாம். குடி என்றால் எல்லாருக்கும் ஒன்று தான். ஆண்களுக்கு என்னவெல்லாம் இருக்குதோ அதுவெல்லாம் அவர்களுக்கும் பொருந்தும். அந்த மாதிரி தான் மது அருந்துவதும். நான் அதை சரி என ஆதரிக்கவில்லை. ஆண் குடிப்பது தப்பு என்றால் பெண் குடிப்பதும் தப்பு தான். 
குடி என்பது நீண்ட நாட்களாகவே உள்ளது. சாராயம் என்ற பெயரில் குடித்தது இன்றைக்கு பார் வரை வந்துள்ளது. அந்த காலத்தில் திராட்சை ரசம் என்ற பெயரில் இருந்தது. ஜீசஸ் கூட குடிச்சிருக்காரு. ராஜா காலத்தில் சோமபானம் என்ற இருந்துள்ளது. குடி என்பது நீண்ட நாட்களாகவே உள்ளது. அது ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வேறு வேறு பெயராக உள்ளது.  இதன் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. 

மேலும் படிக்க: Arabbie: நடிகர் அண்ணாமலை.. விரைவில் ரிலீசாகிறது அரபி படம்..ட்ரெய்லர் இதோ!

மேலும் காண

Source link