தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான நடிகர் விஜய் நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு ரூபாய் ஒரு கோடி நிதி வழங்கியுள்ளார்.
தென் இந்திய நடிகர் சங்கம் கட்டடத்தை கட்டி முடிப்பதற்கு ரூபாய் 40 கோடி தேவைப்படும் என்று நடிகர் சங்கத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டது. இதனால் தென் இந்திய திரைப் பிரபலங்கள் தங்கள் பங்குக்கு நிதி வழங்கி வருகிறார்கள். சமீபத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிகர் சங்க கட்டப் பணிகளுக்கு ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையை வழங்கினார். இந்த காசோலையை நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால் மற்றும் பொருளாலர் கார்த்தி உள்ளிட்டவர்கள் பெற்றுக் கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நடிகர் சங்கக் கட்டடத்திற்கு ரூபாய் ஒரு கோடி வழங்கினார்.
விஜய் 1 கோடி ரூபாய் நிதி:
இந்நிலையில் இன்று அதாவது மார்ச் மாதம் 11ஆம் தேதி நடிகர் சங்க கட்டிடப் பணிகளுக்காக நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் ரூபாய் ஒரு கோடி வழங்கியுள்ளார்.
TVK Leader Thalapathy Vijay Donates Rs 1 Crore For Construction of Nadigar Sangam Building

