Tapsee Pannu: "அதுக்கு ரெடினா உடனே கல்யாணம்தான்" மனம் திறந்த நடிகை டாப்ஸி

தனக்கு குழந்தைப் பெற்றுகொள்ள வேண்டும் என்கிற ஆசை வரும்போது தான் திருமணம் செய்து கொள்ளவே என்று நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.

டாப்ஸி பன்னு

ஆடுகளம் படத்தில் ஐரீனாக தமிழ் சினிமாவிற்கு  நடிகை டாப்ஸி அறிமுகமானார்.  இந்தப் படத்தில் ஆங்கிலோ இந்தியனாக அவரது கதாபாத்திரம் பரவலான கவனம் பெற்றது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.

தொடர்ச்சியாக கமர்சியல் படங்களில் நடித்து வந்த டாப்ஸி ஒரு கட்டத்திற்கு மேல் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினார். பிங், கேம் ஓவர்,ஹஸீனா தில்ருபா, மன்மர்ஸியான் உள்ளிட்டப் படங்களின் மூலம் தனக்கென ஒரு சினிமா பாணியை உருவாக்கி வருகிறார். சமீபத்தில் ஷாருக் கான் நடித்து இந்தியில் வெளியான டங்கி படத்தில் டாப்ஸி நடித்திருந்தார்.

10 ஆண்டுகால காதல்

பிரபலமான ஒரு நடிகையாக இருக்கும்போது தனது தனிப்பட்ட வாழ்க்கையை பெரிய அளவில் ஊடக கவனத்திற்கு டாப்ஸி கொண்டு வருவதில்லை, மாத்தியஸ் பாஸ் என்கிற டென்னிஸ் வீரரும் டாப்ஸியும் கடந்த் 10 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். பொது நிகழ்ச்சிகளில் தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி குறைவாகவே பேச விருப்பப்படுபவராகவே டாப்ஸி இருந்து வருகிறார்.

தனது தனிப்பட்ட வாழ்க்கையை மறைப்பதில் தனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால் அதை விளம்பரத்திற்காக தான் செய்ய விரும்பவில்லை என்று முன்னதாக அவர் கூறியுள்ள நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு நேர்காணல் ஒன்றில்  தனது காதல் உறவைப் பற்றி டாப்ஸி மனம் திறந்து பேசியுள்ளார். தான் ஒரு பிரபலமாக இருப்பதால் வேறு ஒருவரை டேட் செய்வது சிரமமானதாக இருக்கிறதா என்கிற கேள்விக்கு அவர் இப்படி பதில் அளித்துள்ளார்.

” நான் நடிக்க வந்து 13 ஆண்டுகள் ஆகின்றன, என்னுடைய முதல் பாலிவுட் படத்தில் நடிக்கும் போது நான் மாத்தியஸ் பாஸை சந்தித்தேன். நாங்கள் இருவரும் 10 ஆண்டுகளாக காதலித்து வருகிறோம் . அப்போது இருந்து நான் இந்த ஒரு நபருடன் தான் இருக்கிறேன் , இந்த காதலை விட்டுப் போவதற்கும் வேறு ஒருவருடன் இருக்கும் எண்ணமும் எனக்கு கிடையாது. இந்த உறவில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்று அவர் தெரிவித்தார்.

கல்யாணம் எப்போ?

சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு டாப்ஸி பதில் கொடுத்து வந்தார் அப்போத் டாப்ஸி எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த டாப்ஸி “ நான் இன்னும் கர்ப்பமாகவில்லையே’ என்று பதில் அளித்திருந்தார். இதனை விளக்கும் வகையில் அவர் ‘ எனக்கு குழந்தைப் பெற்றுக் கொள்ளும் ஆசை வரும்போது நான் திருமணம் செய்துகொள்வேன். அப்போது நிச்சயம் உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துவேன் ” என்று கூறினார். மேலும் தனது திருமணத்தின் எல்லா நிகழ்ச்சிகளும் ஒரே நாளில் முடியும் வகையில் திட்டமிடுவார் என்று டாப்ஸி தெரிவித்துள்ளார்.

Source link