Suriya 44: சூர்யாவுடன் முதல் முறையாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கைகோர்த்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
அடுத்தடுத்த படங்களில் கமிடாகும் சூர்யா:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் சூர்யா நடிப்பில் கடைசியாக 2022 ஆம் ஆண்டு எதற்கு துணிந்தவன் படம் வெளியானது. அதன்பிறகு சிறப்பு தோற்றத்தில் விக்ரம், ராக்கெட்ரி ஆகிய படங்களில் அவர் நடித்திருந்தாலும் ஹீரோவாக நடித்த படம் வெளியாகி 2 ஆண்டுகள் கடந்து விட்டது.
சூர்யா தற்போது தனது 42வது படமான கங்குவா படத்தில் நடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் மற்றும் திஷா பதானி நடித்துள்ளார்கள். ஸ்டுடியோ க்ரீன் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
மேலும் இப்படத்தில் வில்லனாக பாபி தியோல் நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் கோவை சரளா, யோகிபாபு, ரெட்டின் கிங்ஸ்லி, நடராஜன் சுப்பிரமணியன், ஜெகபதி பாபு, கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பல பிரபலங்களும் கங்குவா படத்தில் இணைந்துள்ளனர். அண்மையில் இப்படத்தில் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற ஏப்ரலில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
கார்த்திக் சுப்புராஜுடன் கைகோர்த்த சூர்யா:
இப்படத்தை தொடர்ந்து, சுதா கொங்கரா இயத்தில் தனது 43வது படத்தில் நடிக்க உள்ளார் சூர்யா. துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கும் இப்படத்தின் அறிவிப்பு கடந்த அக்டோபர் மாதம் வெளியானது. இப்படத்தில் டேக் லைன் உடன் அறிவிப்பு வெளியானது.
ஏற்கனவே, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தை சூர்யா தன் கைவசத்தில் வைத்துள்ளார். இப்படி பிசியாக சூர்யா இருக்கும் நிலையில், இவரின் அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதாவது, சூர்யாவின் 44வது படமாக உருவாகும் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
My Next Film is with the Ever-Awesome@Suriya_offl sir 💥💥🤗So Pumped up for this #Suriya44 👊👊#LoveLaughterWar#AKarthikSubbarajPadam@2D_ENTPVTLTD @stonebenchers @rajsekarpandian @kaarthekeyens pic.twitter.com/DBLlRD9Reh
— karthik subbaraj (@karthiksubbaraj) March 28, 2024
சூர்யாவின் 2டி நிறுவனமும் கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. படத்திற்குரிய போஸ்டருடன் தனது எக்ஸ் தளத்தில் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டிருக்கிறார். Love Laughter war என்ற டேக் லைனுடன் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், முதன்முறையாக சூர்யாவுடன் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கைகோர்த்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
மேலும் காண