Surekha Vani: ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட சுரேகா வாணி தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான துணை நடிகையாக வலம் வருகிறார். குறிப்பாக தெலுங்கில் அம்மா ரோல்களில் நடித்த சுரேகா வாணி தனக்கென தனி ரசிகர்களை கொண்டுள்ளார். தெலுங்கு மட்டுமில்லாமல் தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாக சுரேகா வாணி நடித்துள்ளார். தனுஷ் நடித்த உத்தமபுத்திரன் படத்தில் வில்லனுக்கு மனைவியாக நடித்திருப்பார். தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி படத்தில் அமலாபாலுக்கு அம்மாவாகவும், விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் படத்தில் எம்.எஸ்.பாஸ்கருக்கு மனைவியாகவும் நடித்திருப்பார்.
இதுமட்டுமில்லாமல் விஜய் நடித்த மெர்சல், அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட படங்களிலும் நடிகை சுரேகா வாணி முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளார். இவருக்கு சுப்ரிதா என்ற மகள் இருக்கும் நிலையில் கடந்த 2019ம் ஆண்டு சுரேகா வாணியின் கணவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
தற்போது சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சுரேகா வாணி தனது மகளுடன் ரீல் செய்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சுரேகா வாணி வெளியிட்ட வீடியோ ஒன்று அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மொட்டை தலையுடன் இருக்கும் வீடியோவை சுரேகா வாணி பகிர்ந்துள்ளார். அதை பார்த்தவர்கள் என்ன ஆச்சு என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் சுரேகா வாணி மொட்டை தலையுடன் இருப்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது. அதாவது சுரேகா வாணி தனது மகளுடன் இணைந்து திருப்பதிக்கு சென்று மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார் எனக் கூறப்படுகிறது.