Sun tv Ethirneechal serial today episode written update April 13 promo


சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் இன்றைய (ஏப்ரல் 13) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. கதிர் சக்திக்கு போன் செய்து ஜனனியிடம் கொடுக்கிறான். “சக்தி நீ உடனே கிளம்பி வீட்டுக்கு வாயேன்” என ஜனனி சொல்ல “நானு கதிரும் சேர்ந்து சில விஷயங்கள் பண்ணிட்டு இருக்கோம். சீக்கிரமே ஒரு நல்ல செய்தி வரும்” என சொல்கிறான் சக்தி.
 
 ஈஸ்வரியை தேடி வீட்டுக்கு போலீஸ் வருகிறது. அதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். மீண்டும் சக்தி கதிருக்கு போன் செய்து சித்தார்த்தை காணவில்லை என சொல்லி ஷாக் கொடுக்கிறான். “நான் தான் அவனை பத்திரமா பாத்துக்கோன்னு சொன்னேன்ல. எப்படிடா விட்ட” என கதிர் கேட்க “அந்த கரிகாலன் உள்ள புகுந்து எல்லாத்தையும் குழப்பி விட்டுட்டான்” என சக்தி சொல்ல “அவன் எங்கடா அங்க?” என கதிர் கேட்க சக்தி பயங்கரமாக சத்தம் போடுகிறான். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
 

நேற்றைய கதைக்களத்தில் ஈஸ்வரி தர்ஷினியின் ரூமில் இருக்க ஞானம் வந்து “அண்ணன் வரும் நேரமாச்சு. தேவையில்லாத பிரச்சினை வேண்டாம். நாம பிறகு வந்து பாத்துக்கலாம்” என ஈஸ்வரியிடம் சொல்ல “என்ன நடந்தாலும் நான் தர்ஷியுடன் தான் இருப்பேன்” என விடாப்பிடியாக சொல்லி விடுகிறாள் ஈஸ்வரி. ஜனனியும் கதிரும் வீட்டுக்கு வருவதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள் உமையாள். ஜனனி கடத்தப்பட்ட விஷயம் பற்றி ஈஸ்வரி மற்றும் நந்தினியிடம் சொல்கிறாள் ஜனனி. ராமசாமியின் அடியாள் அஞ்சனாவையும் ஜனனியின் அம்மாவையும் சித்தார்த்தை எங்கே அடைச்சு வெச்சு இருக்க? என கேட்டு அடித்து சித்திரவதை செய்கிறார்கள். நாளை காலைக்குள் உண்மையை சொல்ல வில்லை என்றால் உங்கள் கதை அவ்வளவு தான்.
 
குணசேகரன் வீட்டுக்கு வந்ததும் உமையாள் அவரிடம் வத்தி வைக்கிறாள். அதை கேட்டு விட்டு பெரிய பிரச்சினை செய்கிறார் குணசேகரன். “இந்த நிச்சயதார்த்தம் நடந்தே தீரும்” என சவால் விடுகிறார். ஈஸ்வரி அவரை எதிர்த்து தைரியமாக பேசுகிறாள். உமையாளை வீட்டை விட்டு ஈஸ்வரி விரட்ட குணசேகரன் உமையலுக்கு ஆதரவாக பேசுகிறார். ஞானம், கதிர் என அனைவரும் ஈஸ்வரிக்கு சப்போர்ட் செய்து பேச அனைவரையும் மிரட்டுகிறார் குணசேகரன். “தர்ஷினியை இனி நான் விட்டுக்கொடுக்க மாட்டேன். இதுவரைக்கும் என்னுடைய வாழ்க்கை போனது போதும்” என சொல்ல “நீங்க எல்லாரும் வெளியே போங்க. நான் அப்பாவோட தான் இருப்பேன்” என சொல்லி குணசேகரனுடன் சென்று விடுகிறாள். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.    சித்தார்த் கடத்தலில் இருந்த நோக்கம் இந்த கரிகாலனால் திசை மாறிப்போகிறது. இனி வரும் எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட்களில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

மேலும் காண

Source link