சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal ) தொடரில் தர்ஷினியின் திருமணம் குறித்த கதைக்களம் விறுவிறுப்படையத் தொடங்கியுள்ளது. இது வரையில் கரிகாலன் தான் மாப்பிள்ளை எனக் கூறி சுற்றித் திரிந்த குணசேகரன் தற்போது அவனை வீட்டை விட்டு விரட்டி அடித்து உமையாள் மகன் சித்தார்த்துக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை மும்மரமாக செய்து வருகிறார்.
ஜனனி தன்னுடைய தங்கை அஞ்சனாவின் வாழ்க்கைக்காகவும், தர்ஷினியும் எதிர்காலத்தையும் மனதில் வைத்து குணசேகரனிடம் “இந்தத் திருமணத்தை நடத்த விடமாட்டேன்” என சவால் விடுகிறாள். உன்னால் முடிந்ததை பார்த்துகொள் என குணசேகரன் அவளை துட்சமாக நினைக்கிறார்.
உமையாள் ஈஸ்வரியிடம் சென்று “என்னுடைய பையனை விட உனக்கு வேறு ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைத்துவிடுவானா?” என நக்கலாகப் பேச ஈஸ்வரிக்கு கோபம் தலைக்கேறுகிறது. திருமணம் செய்து கொள்ள போகிறவர்கள் சம்மதம் அதற்கு முக்கியம் என ஜனனி சொன்னதால் தர்ஷினியிடம் சம்மதம் கேட்கப்படுகிறது. தர்ஷினியும் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டது தான் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது. இப்படியாக கடந்த எபிசோட் கதைக்களம் முடிந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
குணசேகரனுக்கு நந்தினி காபி எடுத்து வந்து கொடுக்க, வழக்கம் போல குணசேகரன் திமிராக “எதையும் கலக்கலையே” எனக் கேட்கிறார். “கலக்கணும்னா முன்னாடியே கலந்திருக்கணும்” என நந்தினியும் குணசேகரனுக்கு சரிசமமாக கவுண்டர் கொடுக்கிறாள். குணசேகரன் அவளை திரும்பிப் பார்த்து முறைக்கிறார்.
குணசேகரன் வீட்டுக்கு உமையாள் தனது குடும்பத்துடன் வருகிறாள். மீண்டும் திருமணம் பற்றி பேச்சை ஆரம்பிக்க “உன்னோட மானம் மரியாதை எதையாவது காப்பாத்திக்கணும் என நினைச்சினா இத்தோட நிப்பாட்டிட்டு எல்லாரும் கிளம்புங்க” என ஈஸ்வரி அவர்களிடம் கோபமாகப் பேச, குணசேகரன் ஈஸ்வரியை மிரட்டி அவமானப்படுத்துகிறார்.
குணசேகரன் உமையாள் தனியாக மாடிக்குச் சென்று பேசுகிறார்கள். “அவங்க எல்லாரும் நிச்சயம் தானே கொஞ்சம் மெதுவா அடி எடுத்து வைச்சுக்கலாம் என யோசிக்கிறதுக்கு முன்னாடியே நாம கல்யாணத்தை முடிச்சுடனும்” என இருவரும் பேசி பிளான் போடுகிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ.
நிச்சயதார்த்தம் என்ற பெயரில் தர்ஷினிக்கும் சித்தார்த்துக்கும் கல்யாணம் செய்து வைக்க பிளான் போடுகிறார்கள் என்பது தெரிகிறது. உண்மையிலேயே இந்தக் கல்யாணம் நடைபெறுமா? கரிகாலனால் ஏதாவது சிக்கல் வருமா? 18 வயது பூர்த்தி அடையாத பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள் என குணசேகரன் உமையாள் மீது புகார் அளிக்கப்படுமா? தர்ஷினி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி இதை எதிர்க்க நேரிடுமா? இப்படி பல கேள்விகளுக்கு வரும் எதிர்நீச்சல் (Ethirneechal ) எபிசோடில் விடை கிடைக்கும்.
மேலும் காண