Sun Tv Ethirneechal Serial Today Episode January 26 Promo

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் தர்ஷினியை காணவில்லை என ஈஸ்வரி, ஜனனியுடன் மற்றவர்களும் கோயிலில் தகவலுக்காக மிகவும் வருத்தத்துடன் காத்திருக்கிறார்கள். விசாலாட்சி அம்மா கதிரைத் திட்ட, தாரா தன்னுடைய அப்பாவுக்கு ஆதரவாகப் பேசி உள்ளே அழைத்துச் சென்று நன்றாக கவனித்து கொள்கிறாள்.
மகள் தன்னை பாசத்துடன் பார்த்துக் கொள்வதை பார்த்து மனம் குளிர்ந்த போன கதிர், நந்தினிக்கு போன் செய்து தர்ஷினியை எப்படியாவது தேடி கண்டுபிடித்து அழைத்து வருமாறு சொல்கிறான். மனம் திருந்தி பேசிய கதிரை நினைத்து நந்தினி சந்தோஷப்படுகிறாள்.
 
தர்ஷினி இருக்கும் இடம் பற்றி எந்தத் தகவலும் கிடைக்காததால் அழுது அழுது மனம் நொந்துபோன ஈஸ்வரி, மயக்கம் போட்டு விழுந்துவிடுகிறாள். இந்நிலையில் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.ஈஸ்வரியும் மற்றவர்களும் தர்ஷினியை கடத்திச் சென்ற வண்டியின் விலாசம் கிடைத்துவிட்டதை பற்றி அனைவரிடமும் சொல்வதற்கு வேகவேகமாக ஓடி வருகிறான் சக்தி. பெண்கள் அனைவரும் சாமி கும்பிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். சக்தி வந்து தர்ஷினியை கடத்தியவர்களை பற்றிய விவரம் கிடைத்துவிட்டது என சொல்ல, அனைவரும் ஆறுதல் அடைந்து அந்த இடத்திற்கு விரைகிறார்கள்.
 
தர்ஷினியை கடத்தி வைத்து இருப்பவர்கள் அவளிடம் ” நீ எவ்வளவு சத்தம் போட்டாலும் இங்க எவனுக்கும் கேட்காது” என மிரட்ட “தைரியம் இருந்தா கட்ட கழட்டி விடுங்க” என ஆவேசமாக கத்துகிறாள் தர்ஷினி. தர்ஷினியைத் தேடி அனைவரும் சென்று கொண்டு இருக்கும்போது இன்ஸ்பெக்டரிடம் இருந்து போன் வருகிறது. ஜனனி எடுத்துப் பேச “நான் இன்ஸ்பெக்டர் பேசுறேன். நான் சொல்வதை கொஞ்சம் பதட்டப்படாமல் கேளுங்க” என சொல்கிறார். அவர் அப்படி சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைகிறாள் ஜனனி.
 

ஒரு பெண்ணின் சடலம் கிடைத்து இருப்பதால் இன்ஸ்பெக்டர் அங்கு சென்று பார்த்து அது ஒரு வேலை அது தர்ஷினியாக இருக்குமோ என ஜனனிக்கு போன் செய்து இந்த தகவலை சொல்ல ஜனனி அதிர்ச்சி அடைகிறாள். இந்த விஷயத்தை ஜனனி ஈஸ்வரியிடம் சொல்வாளா இல்லையா? அது உண்மையிலேயே தர்ஷினியா? இல்லை தர்ஷினி தன்னுடைய தற்காப்பு கலையை பயன்படுத்தி கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பித்து விட்டாளா? இப்படி பல பரபரப்பான நிகழ்வுகளுடன் சஸ்பென்சாக ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் (Ethirneechal) தொடர். 

Source link