சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் தர்ஷினியை காணவில்லை என ஈஸ்வரி, நந்தினி, சக்தி மற்றும் ஜனனி ஒரு பக்கம் அங்கும் இங்கும் பதட்டத்துடன் தேடுகிறார்கள். மறுபக்கம் சந்தேகத்தின் பேரில் கரிகாலனையும் ஜானகியையும் கைது செய்து அடித்து விசாரித்த போலீசிடம் இருந்து, அவர்கள் இருவரையும் வெளியில் எடுக்கிறார் குணசேகரன்.
கரிகாலன் தர்ஷினியை பற்றி தப்பாக பேசியதால் அவனை கதிர் ஓங்கி அறைய என்னுடைய கருத்தும் அது தான் அப்போ என்னையும் அறைவியா என கோபத்தில் குணசேகரன் கேட்க, அவரை எதிர்த்து கதிர் பேசியதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார் குணசேகரன்.
தர்ஷினியை தேடுவதற்கு ஜீவானந்தத்தின் உதவியை தேடி அவரின் வீட்டுக்கு செல்கிறார்கள் ஈஸ்வரியும் மற்றவர்களும். ஆனால் ஜீவானந்தம் ஊரில் இல்லை என்ற தகவலை ஃபர்ஹானா மூலம் கேட்டு அறிகிறார்கள். வீட்டில் விசாலாட்சி அம்மவோ மருமகள்களை தவறாக புரிந்து கொண்டு அவர்களை இனி இந்த வீட்டில் சேர்க்க மாட்டேன் என சொல்லி அரிவாளை எடுத்து ஆவேசமாக பேசுகிறார். அந்த வகையில் இன்றைய (ஜனவரி 23) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தர்ஷினி கடத்தப்பட்ட இடத்திற்கு சென்று அங்கு ஏதாவது தகவல் கிடைக்கிறதா? என பார்க்கலாம் என ஈஸ்வரியும் மற்றவர்களும் செல்கிறார்கள். பதட்டத்தில் அவர்கள் அனைவரும் தேட ஜனனி ஒரு வீடியோவை கொண்டு வந்து அவர்களிடம் காட்ட அதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அதில் தர்ஷினி கடத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி உள்ளது. அதை பார்த்த சக்தி “ஜனனி இந்த வீடியோவ யார் குடுத்தது?” எனக்கேட்க “அந்த வீட்ல இருக்கவங்க அன்னிக்கு மேல இருந்து இந்த வீடியோவ எடுத்து இருக்காங்க” என சொல்கிறாள் ஜனனி. அதை பார்த்ததும் ஈஸ்வரி கதறி கதறி அழுகிறாள்.
கதிரை திட்டும் நந்தினி:குணசேகரன் வீடு வாசலிலேயே கோபத்தின் உச்சியில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார். கதிர் நந்தினிக்கு போன் செய்து “உங்களுக்கு என்னத்த தெரியும்? மரியாதையா எல்லாரும் வீடு வந்து சேருங்க. நாங்க எல்லாத்தையும் பாத்துக்குறோம்” என சொல்ல “பாத்து கிழிச்சீங்க” என சொல்லி திட்டி விட்டு போனை வைத்து விடுகிறாள் நந்தினி.
குணசேகரனை பார்க்க ராமசாமியும் கிருஷ்ணசாமியும் வருகிறார்கள். அவர்களிடம் நடந்ததை சொல்லி “என்னோட பொண்ணு யார் வீட்ல இருக்கான்னு எனக்கு தெரியும். அவளை அனுப்பி விட்டது என்னோட பொண்டாட்டி” என சொல்கிறார் குணசேகரன். அவர்களுக்கு குணசேகரனுக்கு ஆறுதல் சொல்கிறார்கள். இது தான் இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
தர்ஷினியை கடத்தியது யாராக இருக்கும். இதற்கு பின்னால் இருப்பது ஜான்சி ராணியா அல்லது குணசேகரனா? இல்லை வேறு யாராவது இப்படி செய்து இருப்பார்களா? ஒரே சஸ்பென்ஸுடன் நகர்ந்து வருகிறது எதிர்நீச்சல் (Ethirneechal) தொடர்.