Sun tv ethirneechal serial today episode February 3 promo


சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (பிப்ரவரி 2 ) எபிசோடில் விசாலாட்சி அம்மா ஞானம் மற்றும் கதிரை சாப்பிட அழைக்க எமோஷனலான ஞானம், குணசேகரன் அவர்கள் இருவரையும் நம்பாமல் பேசியது பற்றி சொல்லி வருத்தப்படுகிறான். யார் யாரையோ நம்புகிறார் ஆனால் எங்களை நம்பாமல் அசிங்கப்படுத்துகிறார். எங்கள் மனைவிகளோடு வாழக்கூடாது என்றால் எங்களுக்கு ஏன் கல்யாணம் செய்து வைக்க வேண்டும். அவரின் தம்பிகளாகவே இருந்து இருப்போம் இல்லையா. பெத்த பிள்ளையை ஒளித்து வைத்து இரவு பகலாக ஓடி கொண்டு இருப்பார்களா? ஏன் அவர் எதையும் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார். எங்களை தயவு செய்து விட்டுவிடுங்கள் என சொல்லிவிடுகிறான் ஞானம்.
ஞானம், தர்ஷன் மற்றும் கதிரை தாரா வெளியில் போய்விட்டு வரலாம் வாங்க என அழைத்து செல்கிறாள். “பெரியாப்பா இவ்வளவு அசிங்கமாக பேசிய பிறகு நாம் ஏன் அவருடைய சாப்பாட்டை சாப்பிட வேண்டும். நம்ம ஹோட்டலில் போய் சாப்பிடலாம்” என சொல்லி அழைத்து செல்கிறாள். ஜீவானந்தம் உடன் பெண்கள் அனைவரும் காட்டுப்பகுதி ஒன்றுக்கு தர்ஷினியை தேடி வந்துள்ளனர். அப்போது ஜீவானந்தம் ஒரு கடையில் அந்த வழியாக கார் எதுவும் வந்ததா என விசாரிக்கிறார். அந்த கடைக்காரர், ஒரு கார் வந்தது ஆனால் அது திரும்பவில்லை என சொல்கிறார். அப்போது தர்ஷினி மருந்து வேண்டும் என சொல்லி எழுதி கொடுத்த பேப்பரை ஜீவானந்தத்திடம் காட்டி அதை பற்றி விசாரிக்கிறான் அந்த ரவுடி. அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. சக்திக்கு அடிபட்டு இருக்கும் தகவல் கதிருக்கும் ஞானத்திற்கும் தெரிய வர அவர்கள் சக்தியை பார்ப்பதற்காக ஹாஸ்பிடலுக்கு வருகிறார்கள். சக்தி நடந்த விஷயத்தை பற்றி சொல்ல அவர்கள் எங்கு சென்று இருக்கிறார்கள் என கதிர் விசாரிக்கிறான். “தயவு செய்து அவர்களை விட்டுவிடு. அவர்கள் அனைவரும் நீங்கள் நினைப்பது போல உலகம் தெரியாதவர்கள் கிடையாது” என சொல்கிறான். குணசேகரன் அவர்களிடம் நடந்து கொண்டதை பற்றி சக்தியிடம் சொல்கிறார்கள் கதிர் மற்றும் ஞானம். அதை கேட்ட ஆதிரை “அவர் பக்கம் நாம இருந்ததால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார். ஆனால் அவருக்கு எதிர்பக்கம் நின்றால் நம்மை காலில் போட்டு மிதிப்பார். இது தான் அவர்” என சொல்கிறாள்.
 
ரவுடி காட்டிய அந்த பேப்பரை வைத்து ஜீவானந்தம் சந்தேகப்பட்டு பின்தொடர்ந்து தர்ஷினியை அடைத்து வைத்திருக்கும் அந்த இடத்திற்கு வந்து விடுகிறார்கள். அப்போது ஜீவானந்தத்தை தேடி சில போலீஸ்காரர்கள் வருகிறார்கள். பெண்கள் அனைவரும் போய் ஒரு இடத்தில் ஒளிந்து கொள்கிறார்கள். வந்த போலீஸ்காரர்கள், ஜீவானந்தத்தை அழைத்து செல்கிறார்கள். அதை பார்த்த ஜனனி “அவர்கள் குணசேகரன் கொடுத்த கேஸிற்காக வந்தவர்களாக இருக்கும்” என சொல்கிறாள்.
 

அந்த இடத்தில் இருக்கும் ரவுடிகளை எப்படி பெண்கள் நால்வரும் சமாளித்து தர்ஷினியை காப்பாற்றி அழைத்து செல்ல போகிறார்கள் என தெரியவில்லை. பரபரப்பான கட்டத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட்.      

மேலும் காண

Source link