கொரியன் படைப்புகள் தற்போது உலகெங்கிலும் மிகவும் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் கொரியன் படங்கள், வெப் சீரிஸ், பாப் பாடல்கள் என அனைத்தையும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
அந்த வகையில் தென் கொரியாவை சேர்ந்த பாப் பாடகியாக பிரபலமானவர் நடிகை பார்க் போ ராம். தன்னுடைய மயக்கும் இசையால், பாப் பாடல்களால் ரசிகர்களை கவர்ந்தவர். கடந்த பத்து ஆண்டுகளாக ‘XANADU எண்டர்டெயின்மெண்ட்’ என்ற இசை நிறுவனத்தை நடத்தி வருகிறார். மிக பெரிய செலிபிரிட்டியாக இருந்து வரும் பார்க் போ ராம் ஏப்ரல் 11ம் தேதியன்று உயிரிழந்தார். இந்த தகவலை ‘XANADU எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 30. பார்க் போ ராம் மறைவு செய்து தென் கொரிய இசை பாடகர்கள் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சி ஆழ்த்தியுள்ளது.
பார்க் போ ராம் இறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் அவர் ஒரு தனியார் கூட்டத்தில் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. சுமார் இரவு 10 மணியளவில் ரெஸ்ட் ரூமுக்கு சென்று அவர் திரும்பி வராததால் சந்தேகப்பட்டு அவரது தோழிகள் சென்று பார்த்த போது அவர் சுயநினைவின்றி கிடந்ததாக கூறப்படுகிறது. முதலுதவி செய்தும் எதுவும் முன்னேற்றம் இல்லாததால் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் இரவு 11 மணியளவில் அவரின் உயிர் பிரிந்தது என தெரிவித்துள்ளனர்.
மது அருந்தியது தான் அவரின் மரணத்திற்கு காரணமா? அல்லது இந்த இறப்பு பின்னல் வேறு எதுவும் காரணம் உள்ளதா என்பதை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.
Published at : 13 Apr 2024 09:12 AM (IST)
மேலும் காண