கொடுக்காளி, ஏழு கடல் ஏழு மலை, விடுதலை உள்ளிட்ட சூரி நடித்த மூன்று படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப் பட்டுள்ளன.
சூரி
நடிகர் சூரி தற்போது சர்வதேச திரைப்பட ரசிகர்களிடம் பாராட்டுக்களை அள்ளி வருகிறார். ஒரே நேரத்தில் சூரி நடித்துள்ள மூன்று படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப் பட்டுள்ளன. ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி நடித்துள்ள ஏழு கடல் ஏழு மலை, வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 1 மற்றும் 2 ஆம் பாகங்கள் சமீபத்தில் நெதர்லாந்தில் நடைபெற்ற ராட்டர்டாம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டன.
இந்த படங்கள் இரண்டிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சூரியின் நடிப்பு சர்வதேச ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்தபடியாக பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி நடித்துள்ள கொட்டுக்காளி படம் பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அடுத்தடுத்த திரையிடல்களில் கூட்டம் நிரம்பி வழிய இந்தப் படம் பாராட்டுக்களை குவித்து வருகிறது. இது தொடர்பாக சூரி அளித்த நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளது வீடியோ அவனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
. @sooriofficial 👀👀#Kottukkaali pic.twitter.com/HiRN4YJdAr
— Prakash Mahadevan (@PrakashMahadev) February 23, 2024
குரலை சேதப்படுத்திக் கொண்டேன்
கொட்டுக்காளி படத்தில் தனது குரலை வேண்டுமென்றே சேதப்படுத்திக் கொண்டதாக நடிகர் சூரி கூறியுள்ளது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் கூறுகையில் “ கொட்டுக்காளி படத்தில் ஒரு காட்சியில் என் குரல் கட்டியதைப் போல் இருக்க வேண்டும் என்று இயக்குநர் கேட்டார். அது ஒரு பெரிய டெக் என்பதால் ரீடேக் போவது கஷ்டம். இதனால் நானே ஒரு ஐடியா பன்னினேன். டாக்டரிடம் சென்று என்னுடைய குரலை கொஞ்சமாக கட்டியதுபோல் சேதப்படுத்த ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா என்று நான் கேட்டேன். இதை கேட்ட மருத்துவர் சிரித்துவிட்டார்.
மேலும் நோயை குனப்படுத்த வேண்டிய தன்னால் இப்படி செய்ய முடியாது என்றும் அவர் கூறினார். நான் அவரை ரொம்ப வற்புறுத்தியதால் அவர் எனக்கு சில நாட்டு மருந்துகளை பரிந்துரை செய்தார். இந்த மருந்துகளை சாப்பிட்டால் நம் குரல் சேதமடைந்து விடும். மரப்பட்டைகள் ஒரு சில இலைகள் என எல்லாவற்றையும் சேர்த்து சாப்பிடத் தொடங்கினேன். பேசவே முடியாத அளவிற்கு எனது குரல் கம்மிவிட்டது.
அதோடு தான் இந்த காட்சியில் நடித்தேன். இந்தப் படத்தைப் பார்த்த அனைவரும் என்னிடம் வந்து எப்படி குரலை அவ்வளவு வறுத்தி என்னால் நடிக்க முடிந்தது என்றுதான் கேட்டார்கள்.’ என்று சூரி பேசியுள்ளார்.தனது கதாபாத்திரத்திற்காக சூரி எடுத்துக் கொள்ளும் இப்படியான முயற்சிகள் ரசிகர்களால் பாராட்டப் படுகின்றன.
மேலும் படிக்க : Ethirneechal: ஜனனிக்கும் சக்திக்கும் காத்திருக்கும் அதிர்ச்சி… எதிர்நீச்சலில் இன்று நடப்பது என்ன?
மேலும் காண