sk 23 a r murugadoss actress rukmini vasanth introduction


கன்னடத்தில் ரசிகர்களிடம் பெறும் வரவேற்பைப் பெற்றுள்ள நடிகை ருக்மிணி வசந்த் சிவகார்த்திகேயனின் எஸ்ஸ்.கே 23 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
எஸ்.கே.23
 தீனா, கஜினி , துப்பாக்கி , கத்தி, சர்கார் உள்ளிட்டப் படங்களை இயக்கிய ஏ.ஆர் முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைத்துள்ளார். சிவகார்த்தியேனின் 23-வது படமான இதில் கன்னட நடிகை ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். திலிப் சுப்புராயன் ஸ்டன்ட் மற்றும் சுதீப் எலமன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது.
துப்பாக்கி, கத்தி மாதிரியான ஒரு ப்ளாக்பஸ்டர் படமாக இப்படம் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். இப்படத்தில் அதிகம் கவனம் ஈர்த்துள்ள ஒரு நடிகை ருக்மிணி வசந்த். சமீப காலத்தில்  ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஒரு நடிகை ருக்மிணி வசந்த். அவரைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தைப் பார்க்கலாம்.
ருக்மிணி வசந்த்

பெங்களூரில் வசிக்கும் தமிழ் பேசும் குடும்பத்தில் பிறந்தவர் ருக்மிணி வசந்த். இவரது தந்தை இந்திய ராணுவத்தில் கர்னலாக இருந்தவர். இந்திய பாகிஸ்தான் எல்லையில் இருந்தபோது அவர் உயிரிழந்தார். ருக்மிணி வசந்தின் அம்மா சுபாஷினி வசந்த் ஒரு புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர். போரில் விதவையான பெண்களுக்காக  ஒரு அமைப்பையும் அவர் நடத்தி வருகிறார். லண்டனில் நடிப்பு பயிற்சி பெற்ற ருக்மிணி வசந்த் கடந்த 2019-ஆம் ஆண்டு பிர்பால் ட்ரிலாஜி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சப்த சாகரதாச்சே எல்லோ படம் அவருக்கு இந்திய அளவில் மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தது. சைட் ஏ , சைட் பி என்று இரு பாகங்களாக வெளியான இப்படத்தில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.
எதார்த்தமான நடிப்பு, சின்ன சின்ன ரியாக்‌ஷன்களில் மிக ஆழமான உணர்ச்சியகளை இப்படத்தில் அவர் வெளிப்படுத்தி இருந்த விதம் ரசிகர்களை கவர்ந்தது.

ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகும் விஜய் சேதுபதியின் 51-வது படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக இருக்கிறார் ருக்மிணி வசந்த். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் தற்போது அவர் சிவகார்த்திகேயனின் படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார். மலையாளம் , தெலுங்கு , உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு நடிகைகள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்கள். அந்த வகையில் ருக்மிணி வசந்த் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெறுவார் என்று எதிர்பார்க்கலாம். 
எஸ்.கே 21
தற்போது சிவகார்த்திகேயன் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்.கே 21 படத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. வரும் பிப்ரவரி 16 ஆம் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படத்தின் டைட்டில் டீசர் வெளியாக இருக்கிறது

மேலும் காண

Source link