STR48 First Twinkle: சிம்பு நடிக்கும் STR48 படப்பிடிப்பு நாளை மறுநாள் தொடங்கும் என கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் தனக்கான தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் சிலம்பரன். டி.ராஜேந்திரனின் மகனான இவர், சிறுவயதில் இருந்து நடித்து வருகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டும் இல்லாமல் இயக்கம், நடனம், பாடல் எழுதுவது, பாடல் பாடுவது என ஆல்ரவுண்டராக வலம் வரும் சிம்புவுக்கு ஃபேன் பேஸ் அதிகம்.
கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்த சிம்வுக்கு கம்பேக் கொடுத்தது வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த மாநாடு திரைப்படம். இந்தப் படம் பிளாக்பஸ்டர் வெற்றியைக் கொடுத்ததால், அடுத்ததாக கௌதம் வாசுதேவ் மேனனுடன் இணைந்து வெந்து தணிந்தது காடு படத்தில் பணியாற்றினார். இந்தப் படமும் வெற்றிப்பெற்றதால் சிம்புவின் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
அடுத்ததாக கடந்த ஆண்டு சிம்புவின் நடிப்பில் வெளிவந்த ‘பத்து தல’ படம் அவரை பிளாக்பஸ்டர் ஹீரோவாகக் கொண்டாட வைத்தது. இந்த நிலையில் அடுத்ததாக தனது 48வது படத்தில் நடிக்க சிம்பு கமிட்டானார். கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. படத்தை இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்குவார் என்ற தகவல் சிம்பு மீண்டும் ஒரு நல்ல படப்பை தருவார் என்று ரசிகர்களை எதிர்பார்க்க வைத்துள்ளது.
“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற இயக்குநர் தேசிங்கு பெரியசாமி, சிம்புவுக்கு பக்காவான ஸ்கிரிப்டை எழுதியிருப்பார் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சிம்பு நடிக்கும் STR48 படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 2ம் தேதி தொடங்கும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பீரியட் ஆக்ஷன் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. படம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாராகும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் STR48 படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட் சிம்பு ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.
மேலும் காண