தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். இந்த சீரியல் இன்று முதல் புதிய நேரத்தில் அதாவது மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் அர்ச்சனாவும் கல்பனாவும் சேர்ந்து மகாவை சுட்டுக் கொள்ள முடிவெடுத்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது மகா இரவு நேரத்தில் ஹாலில் அங்கம் இங்குமாக நடந்து கொண்டிருந்த நிலையில், இன்று சுபாஷ் ஏற்பாடு செய்த ஆள் ஒரு பக்கம், அர்ச்சனா ஒரு பக்கம், கல்பனா ஒரு பக்கம் என துப்பாக்கியுடன் மறைந்திருந்து மகாவை தாக்க ப்ளான் போட, திடீரென மகா குண்டடிப்பட்டு கீழே சரிந்து விழுந்து உயிரை விடுகிறாள்.
இதனால் மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகிறது. அர்ச்சனா கல்பனாவிற்கு ஃபோன் போட்டு “நீ சொன்ன மாதிரியே செஞ்சிட்ட” என்று சொல்ல, சுபாஷ் இங்கே தான் ஏற்பாடு செய்த ஆளை மகாவை சுட்டுத் தள்ளியதற்காக பாராட்ட, யார் இந்தக் கொலையை செய்தது என குழப்பம் ஏற்படுகிறது.
பயிற்சிக்கு சென்று இருந்த ராம் வீடு திரும்பி மகாவுக்கு இறுதிச் சடங்குகளை செய்கிறான். அதுமட்டுமல்லாமல் “சித்தியை கொன்றது யாராயிருந்தாலும் சும்மா விடமாட்டேன். கண்டிப்பாக தண்டனை வாங்கித் தருவேன்” என சொல்கிறான். இப்படியான பரபரப்பான கட்டத்தில் இன்றைய சீதாராமன் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Rajinikanth – Pa.Ranjith: ராமர் கோயில் பற்றி ரஜினி பேசியது சரியா தவறா? – பா. ரஞ்சித் சொல்வது என்ன?
மதமும் கடவுளும் அரசியல்வாதிகளின் கைகளில் சிக்குவது மிகவும் ஆபத்து: ராமர் கோயில் திறப்பு குறித்து நடிகர் கிஷோர் கருத்து