seetha raman serial udapte today february 16th zee tamil written update


தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் நான்ஸி கல்பனாவை அர்ச்சனா கெட்டப்பில் வீட்டிற்கு அழைத்து வர, மூன்று பெண்களும் கல்யாண நாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 
அதாவது, சுபாஷ் அது கல்பனா எனத் தெரியாமல் ஐ லவ் யூ சொல்லி கட்டிப்பிடிக்கப் போக, கல்பனா கடுப்பாகிறாள். மூன்று பெண்களும் ஒன்றாக சேர்ந்து கேக் கட் பண்ண சொல்ல, இருவரும் கேக்கை கட் செய்ய, சுபாஷ் ஊட்டி விட்டு முகத்தில் கிரீம் தடவ, சீதா இதைப் பார்த்து “மகா செத்து இன்னும் ஒரு மாசம் கூட ஆகல, அதுக்குள்ள இப்படியா, இதெல்லாம் தேவையா?” என்று சத்தம் போட, நான்சி “மகா சாவுக்கு நீ தான் காரணம். உனக்கு தூக்கு தண்டனை வாங்கித் தராமல் விட மாட்டேன்” என்று எச்சரிக்கிறாள். 
பிறகு ரூமுக்குள் செல்லும் கல்பனா, கதவை லாக் செய்து ஸ்மோக் செய்ய, சேது அர்ச்சனாவை கூல் செய்ய மேலே வந்து கதவைத் தட்ட, சிகிரெட்டை தூக்கிப் போட்டு கதவைத் திறக்க, சுபாஷ் ரொமான்டிக்காக நெருங்கி வர, கல்பனா ஒரு அறை விட்டு வெளியே துரத்துகிறாள். உடனே நான்ஸி கல்பனாவை தனது ரூமுக்கு கூப்பிட்டு சுபாஷை அடித்ததற்காகவும் ஸ்மோக் செய்தததற்காகவும் பளாரென அறைகிறாள். “இன்னொரு முறை இப்படி நடந்துக்கிட்டா ஜெயிலுக்குள்ள தான் இருக்கனும்” என வார்னிங் கொடுக்க, இவர்கள் பேசுவதை சீதா பார்த்து விடுகிறாள். 
ஆனால் என்ன பேசிக்கிறாங்க என்று தெரியாமல் கன்ப்யூஸ் ஆகிறாள். அதனைத் தொடர்ந்து ராஜசேகர் ராமை கூட்டிக்கொண்டு அனுபவம் வாய்ந்த தடவியல் நிபுணர் ஒருவரை சந்தித்து துப்பாக்கியைக் கொடுத்து கை ரேகை  குறித்து ஆராய்ந்து சொல்ல சொல்கின்றனர்.
அதை ஆய்வு செய்த அவர், “சீதா இந்தத் துப்பாக்கியை ஒரே முறை தான் எடுத்து சுட்டு இருக்கா, திரும்பவும் அவ இந்த துப்பாக்கியையே தொடல” என்று சொல்ல, ராம் அதிர்ச்சி அடைகிறான். இப்படியான நிலையில் இன்றைய சீதா ராமன் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Flashback: கன்னத்தில் முத்தமிட்டால் இந்திரா: சிறப்பாக நடித்தும் தேசிய விருதை மிஸ் செய்த சிம்ரன்! இப்படி ஒரு காரணமா!
Thalapathy: பாட்டுல கூட அரசியலா? – விஜய் பட பிரச்னையால் கோபப்பட்ட விஜய் ஆண்டனி

மேலும் காண

Source link