Neeye Oli Concert: பாடகர் அறிவு என் செல்போன் எண்ணை பிளாக் செய்துள்ளார் என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசியுள்ளார்.
சென்னை நேரு ஸ்டேடியத்தில் சந்தோஷ் நாராயணின் ‘நீயே ஒளி’ இசை நிகழ்ச்சி வரும் 10ம் தேதி நடைபெறுகிறது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தலைமையில் நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சி 6 மணி நேரம் வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இசை நிகழ்ச்சிக்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்பனையாகும் நிலையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நீயே ஒளி படத்திற்கு அறிவு பாடல் எழுதியது குறித்தும், அவருடன் ஏற்பட்ட முரண்பாடுகள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த சந்தோஷ் நாராயணன், “நீயே ஒளி பாடலை அறிவு எழுதியுள்ளார். அவருக்கு மெசேஜ் அனுப்பினேன். வந்தால் மகிழ்ச்சி.அவர் என்னை பிளாக் செய்துள்ளார் என்று நினைக்கிறேன். தீ மற்றும் அறிவு பாடிய பாடல்கள் பல உள்ளன. என்ஜாய் எஞ்சாமி பாடல் விவகாரத்தில் சில கோபங்கள் இருக்கலாம். காத்திருந்தால் எல்லாம் சரியாகும். கோபம் இருந்தால் எதனால் பிரச்சனை நடந்தது என புரிந்து கொண்டால் எல்லாம் சரியாகி விடும். அதற்காக நான் காத்திருக்கிறேன்” என்றார்.
என்ஜாய் எஞ்சாமி ஆல்பம் பாடல் வெளியானதை தொடர்ந்து தன்னை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் அவரது மகளும், பாடகியுமான தீ புறக்கணித்து விட்டதாக கூறி தெருக்குரல் அறிவு குற்றம்சாட்டினார். இதனால் அறிவுக்கு ஆதரவாக சந்தோஷ் நாராயணனை பா. ரஞ்சித் கடிந்துக் கொண்டனர். அட்டக்கத்தி படத்தில் பா. ரஞ்சித் மற்றும் சந்தோஷ் நாராயணன் ஒன்றாக பணியாற்றிய நிலையில் தங்கலான் படத்தில் வேறொரு இசையமைப்பாளருடன் பா. ரஞ்சித் பணியாற்றி வருகிறார்.
சில காலங்களாக இருந்த சந்தோஷ் நாரயணன், அறிவு பிரச்சனை நீயே ஒளி என்ற இசை நிகழ்ச்சியால் முடிவுக்கு வந்துவிட்டதாக பார்க்கப்பட்டது. இந்த சூழலில், அறிவு தன் தொலைபேசி எண்ணை பிளாக் செய்திருப்பார் என பேசி சந்தோஷ் நாராயணன் அதிர்ச்சி அளித்துள்ளார்.
“ரஞ்சித் தான் இந்த நிகழ்ச்சி குறித்து முதலில் ட்வீட் செய்திருந்தார். சினிமாவில் ஒரு கூட்டணி அமைத்து படம் பண்ணும் நாட்கள் முடிந்தவிட்டதாக நினைக்கிறேன். அந்தந்த படத்துக்கு எது செட் ஆகுமோ அப்படித்தான் வேலைசெய்கிறார்கள். அதற்காக அந்தப் படத்தில் இணைந்து பணியாற்றாதவர்கள் சண்டையிட்டு கொண்டார்கள் என்றெல்லாம் இல்லை. கார்த்திக் சுப்புராஜூம் நானும் நல்ல நண்பர்கள். ஆனால், அவருடன் அனிருத், நான் என மாறி, மாறி வேலை செய்துள்ளோம். மற்றப்படி சண்டை எல்லாம் இல்லை. பா. ரஞ்சித் மீது எனக்கு மரியாதை உள்ளது. அவரது தங்கலான் படம் வெற்றிப்பெற வாழ்த்துகள் என்றார்.
மேலும் காண