தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம்.
இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கிஷோர் வீட்டுக்கு வந்திருக்க மாயாவை கூப்பிட்டு கொண்டு கிளம்பிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் . ரகுராம் மாயா இங்கேயே இருக்கட்டும் என்று சொல்ல, மாயா எனக்கு இங்கே சரிவராது என்று கூறுகிறார்.
உடனே தனலட்சுமி மாயாவைக் கட்டிப்பிடித்து கண் கலங்கி அழ மாயாவும் மீண்டும் வீட்டிற்குள் வருகிறாள். அதைத்தொடர்ந்து கிஷோர் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது தன்னுடைய மனைவி பற்றி பேசுகிறான்.
“எல்லாரும் அம்மா இறந்து போயிட்டா என்ன ஆகும், அப்பா இறந்து போயிட்டா என்ன ஆகும் என்றெல்லாம் சொல்லி இருக்காங்க, ஆனா மனைவி இறந்து போயிட்டா புருஷனோட நிலைமை என்னாகும் என்று ஒருத்தரும் சொன்னதில்லை” என்று பேச அதைக் கேட்டு எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியான நிலையில் இன்றைய சந்தியா ராகம் சீரியல் நிறைவடைந்தது.
மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil: ”உங்க கேமுக்கு என் பெயரையா பயன்படுத்துவீங்க?” அர்ச்சனாவிடம் வினுஷா கேட்ட பளார் கேள்வி!
Bigg Boss Tamil: பி.ஆர் எல்லாம் வேணாம்! பிக்பாஸில் அசால்ட்டாக மக்கள் மனங்களை வென்ற போட்டியாளர்கள்!