Rekha Nair : குட்டையோ நெட்டையோ எது போட்டாலும் ஆபாசமா பாப்பீங்க.. ரேகா நாயர் பேச்சு..

ஆபாசம் என்பது பெண்கள் அணியும் உடையில் இல்லை உங்களது கண்களில்தான் இருக்கிறது என்று நடிகை ரேகா நாயர் கூறியுள்ளார்

ரேகா நாயர்

பகல் நிலவு , வம்சம் , ஆண்டாள் அழகர், நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை ரேகா நாயர்.  பார்த்திபன் இயக்கத்தில் கடந்த ஆண்டு  வெளியான  ‘இரவின் நிழல்’ படத்தில் நிர்வாண காட்சி ஒன்றில் நடித்திருந்தார். இந்தக்காட்சி குறித்து திரைப்பட விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் அது குறித்து தவறான வகையில் பேசினார். இதனால் கடுப்பான அவர் பயில்வான் ரங்கநாதன் கடற்கரையில் வாக்கிங் சென்றபோது அவரிடம் வாக்குவாதம் செய்த வீடியோ கடந்த ஆண்டு இணையதளத்தில் பரவியது.

இந்த சர்ச்சை நடந்து வந்தபோது ரேகா நாயர் பெண்கள் ஆடை அணிவது குறித்து யூடியூப் சேனல்களில் பேசியிருந்தார். இந்த வீடியோவில் அவர் பேசிய கருத்து அனைவரையும் கவர்ந்தது.

அவர் அப்படி வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசலாமா? நான் அந்த படத்தில் நிர்வாணமாக நடித்திருக்கிறேனா?  நான் எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் அவருக்கு என்ன அதில் அக்கறை.. அப்படியே நடித்திருந்தாலும் அவர் பேச என்ன தகுதி இருக்கிறது. நான் அவரது மனைவியா? இல்லை மகளா? அதனால்தான் அவரிடன் சண்டையிட்டு செருப்பு பிய்ந்துவிடும் என்று சொல்லி விட்டு வந்தேன்” என்று இந்த நிகழ்வைத் தொடர்ந்து  தன் சார்பில் ரேகா நாயர் விளக்கமளித்தார்

ஆடை என்பதை ஆபாசமாக நினைக்கிறீர்கள்

இந்த வீடியோவில் பேசிய ரேகா நாயர் ”ஆதிக் காலத்தில் ஆதாம் ஏவாள் எந்த ஆடையும் அணியாமல் தான் இருந்தார்கள். முதலில் நாம் இலைகளால் உடலை மறைத்தோம். பின் புலித்தோல் மற்றும் மாட்டுத் தோலைக் கொண்டு உடலை மறைத்தோம். இதற்கு எல்லாம் முன் மனிதன் உடை இல்லாமல் தான் இருந்திருக்கிறார். உடையை நீங்கள்தான் ஆபாசமாக பார்க்கிறீர்கள்“ என்று அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் “தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையான புடவையைக் கட்டினால் கூட அதில் மார்பகங்களையும் இடுப்பையும் தான் பார்க்கிறார்கள். புஷ்பா படத்தில் வரும் பாடல் போல் குட்டை பாவாடை போட்டாலும், நெட்டை பாவாடை போட்டாலும் பார்ப்பீர்கள். இதனால் மாற்ற வேண்டியது மக்களின் பார்வையைத்தான் தவிர உடையை இல்லை. ஒரு பெண் உடையே இல்லாமல் நிர்வாணமாக கிடந்தால் தனது வேஷ்டியை கொண்டு அவளது உடலை மறைப்பவன் நல்ல மனிதன். அதே நேரத்தில் இழுத்து மூடிக் கொண்டு ஒரு பெண் இருக்கும் போதும் அவளை தொட்டு துன்புறுத்தும் ஆணும் இந்த சமூகத்தில் இருக்கதான் செய்கிறான்.

சமூகத்தில் ஏற்படும் பல பிரச்சனைகள் அபாசமான உடைகளால் தான் நடக்கிறது என்பது இல்லை. முதலில் அந்த எண்ணத்தை மாற்றுங்கள். ஆபாசமான உடை என்பது ஒன்று இல்லை . உடையில் ஆபாசம் இல்லை உங்களது பார்வையில் தான் ஆபாசம் இருக்கிறது. முதலில் அதை மாற்றுங்கள்“ என்று ரேகா நாயர் தெரிவித்துள்ளார்.

Source link