Rashmika Mandanna Escaped Death Post As Flight Hit By Technical issues lal salam collection cinema headlines | Cinema Headlines:நூலிழையில் உயிர் தப்பிய ராஷ்மிகா; வசூலில் சொதப்பிய லால் சலாம்


Aishwarya Shankar: இயக்குநர் ஷங்கர் மகளுக்கு உதவி இயக்குநருடன் இரண்டாவது திருமணம்: வாழ்த்திய தங்கை அதிதி!
இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் ஐஸ்வர்யா ஷங்கர்  மற்றும் ஷங்கரின் உதவி இயக்குநர் தருண் கார்த்திகேயனுக்கும் திருமணம் நிச்சயிக்கப் பட்டுள்ளது. இந்தத் தகவலை நடிகை அதிதி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விரைவில் இவர்களின் திருமணம் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் படிக்க
Kamala Cinemas: மீண்டும் போட்டி போட்டுக்கொண்டு களமிறங்கும் ரீரிலீஸ்! எப்போ யாரு படங்கள்?
வரும் பிப்ரவரி 22ஆம் தேதி அண்ணாமலை திரைப்படம் கமலா திரையரங்கில் வெளியாகிறது. தொடர்ந்து ரஜினி நடித்த மன்னன் படமும் வெளியாக இருக்கிறது. மேலும் இதே தேதியில் விஜய்யின் திருமலை படமும் திரையிடப்படுகிறது. 
இப்படங்கள் தவிர்த்து விஜய்  நடித்த காதலுக்கு மரியாதை மற்றும் அஜித் குமார் நடித்த வாலி படமும் வரும் 23ஆம் தேதி வெளியாக இருக்கின்றன. ஹரி இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான சாமி படம் வரும் பிப்ரவரி 29 ஆம் தேதி வெளியாகிறது. மேலும் படிக்க
One 2 One: வெளியானது சுந்தர் சி நடித்த ஒன் டூ ஒன் படத்தின் சிங்கம் சிறுத்தை பாடல் லிரிக்ஸ் வீடியோ!
இயக்குநர் திருஞானம் இயக்கத்தில் சுந்தர் சி அனுராக் கஷ்யப் நடித்துள்ள படம் One 2 One. இருவேறு குணங்கள் கொண்ட கதாபாத்திரங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் படமாக one to one படம் உருவாகி இருக்கிறது. தற்போது இந்த படத்தில் இருந்து சிங்கம் சிறுத்தை என்கிற லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ நடிகர் விஜய் சேதுபதியின் குரலில் அமைந்துள்ளது.மேலும் படிக்க
Lal Salaam Box Office: வசூலில் சொதப்பிய ரஜினியின் லால் சலாம்! 9 நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் என்ன?
லால் சலாம் படம் முதல் நாளில் இந்தியளவில் 3.55 கோடியும் இரண்டாவது நாளாக 3.25 மற்றும் மூன்றாவது நாளாக 3.15 கோடியும் வசூல் செய்தது.  இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் படத்தின் வசூல் குறையத் தொடங்கியது. நான்காவது நாளாக 1.13 கோடிகளாக குறைந்த படத்தின் வசூல் அடுத்தடுத்த நாட்களில் சரிவை நோக்கிச் சென்றுள்ளது. மேலும் படிக்க
Rashmika Mandana: விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: நூலிழையில் உயிர் தப்பிய ராஷ்மிகா: நடந்தது என்ன?
மும்பையில் இருந்து ஹைதராபாத்துக்கு விஸ்தாரா நிறுவன விமானத்தில் ராஷ்மிகா மந்தனா புறப்பட்டார். ராஷ்மிகாவுடன் நடிகை ஷ்ரத்தா தாசும் பயணித்ததாகக் கூறப்படுகிறது. இந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு நடுவானில் பறந்து கொண்டிருந்த போது,  திடீரென்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. அப்போது உயிர் தப்பித்தது எப்படி? என்பது குறித்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.மேலும் படிக்க
 

மேலும் காண

Source link