Raayan Movie Update Actor SJ Suryah Add on Cast Lead Role Sun Pictures Dhanush


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தன்னுடைய 50வது படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.  அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே ப.பாண்டி படத்தை தனுஷ் இயக்கியிருந்ததால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் ஏகப்பட்ட நம்பிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யா நடிப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. எஸ்.ஜே. சூர்யா இந்த படத்தில் நடித்துள்ளார் என்பது ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே ராயன் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை மேலும் பல மடங்கு உயர்த்தியுள்ளது. 
இது தொடர்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் புகைப்படத்தை வெளியிட்டு Introducing SJ Suryah from the world of #Raayan என பதிவிட்டுள்ளது. இந்த பதிவிற்கு ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கி வருகின்றனர். பலர் எஸ்.ஜே. சூர்யா இருப்பதால் படம் கட்டாயம் தரமான படமாக இருக்கும் என தெரிவித்து வருகின்றனர். 
கடந்த டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக  தனுஷ் தெரிவித்த நிலையில் ஏப்ரல் மாதம் இந்த படம் வெளியாகும் என கூறப்படுகிறது. ராயன் படத்துக்காக தனுஷ் மொட்டையடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் வன்முறைக்கு படத்தில் பஞ்சம் இருக்காது என்பதை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உறுதி செய்துள்ளது. 
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் ராயன் படத்துக்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா எடிட்டிங் பணியை மேற்கொள்ளும் நிலையில் ராயன் படம் இந்தாண்டே திரைக்கும் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்குப் பின் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வருகின்றார். அதன் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வடசென்னையைச் சேர்ந்த மூன்று சகோதரர்களின் கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி இருப்பதாக முன்னதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.  தனுஷூடன் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்து நடித்த சந்தீப் கிஷன் மற்றும் நடிகர் காளிதாஸ் இப்படத்தில் தனுஷின் சகோதரர்களாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக தனுஷ் படம் என்றால் அதற்கு அனிருத் இசையமைப்பது வழக்கம். ஆனால் தனுஷ் இயக்கும் இரண்டு படங்களுக்கு அனிருத் இசையமைக்காதது தனுஷின் முடிவாக இருக்கலாம். தனுஷ் முன்னதாக நடித்த மரியான் மற்றும் இந்தியில் வெளியான ராஞ்சனா உள்ளிட்ட படங்களுக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த இரண்டு படங்களில்  அனைத்துப் பாடல்களும் ஹிட் அடித்தன. தற்போது இப்படத்திற்கு ரஹ்மானின் இசை கூடுதல் பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
அதே நேரத்தில் வளர்ந்து வரும் நடிகர்களான காளிதாஸ் ஜெயராம் மற்றும் சந்தீப் கிஷன் இப்படத்தில் நடித்துள்ளதும் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

மேலும் காண

Source link