நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் கதாபாத்திரம் தொடர்பான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான முக்கிய அறிவுப்பு ஒன்றை தனுஷ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

What a pleasure @prakashraaj sir 🤗♥️ pic.twitter.com/7ZzoVeEntk

— Dhanush (@dhanushkraja) February 23, 2024

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தன்னுடைய 50வது படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே ப.பாண்டி படத்தை தனுஷ் இயக்கியிருந்ததால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

எஸ்.ஜே. சூர்யா, இயக்குநர் செல்வராகவன் ஏற்கனவே இந்தப் படத்தில் இணைந்துள்ள நிலையில், பிரகாஷ் ராஜூம் இணைந்துள்ளது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தனுஷ் தெரிவித்த நிலையில் ஏப்ரல் மாதம் இந்த படம் வெளியாகும் என கூறப்படுகிறது. ராயன் படத்துக்காக தனுஷ் மொட்டையடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் வன்முறைக்கு படத்தில் பஞ்சம் இருக்காது என்பதை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உறுதி செய்துள்ளது.