Priyanka Nalkari broke her relationship with her husband within one year has shocken her fans


சன் டிவி சீரியல் மூலம் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை பிரியங்கா நல்காரி. மிகவும் பிரபலமாக ஏராளமான சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் தொடராக ஒளிபரப்பான ‘ரோஜா’ சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை பிரியங்கா நல்கரி. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் முன்னணியில் தொடர்ச்சியாக இருந்து வந்தது ரோஜா சீரியல். இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற பிரியங்காவின் திருமணம் முடிவுக்கு வந்தது என சில தகவல்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.  
 

ரோஜா சீரியல் முடிவடைந்ததும், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்ட ‘சீதா ராமன்’ சீரியலில் லீட் ரோலில் நடித்து வந்தார் பிரியங்கா நல்காரி. அந்த சீரியலில் பிஸியாக நடித்து வந்த பிரியங்கா திடீரென தனது காதலர் ராகுல் என்பவரை, மலேசியா கோயிலில் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து அவரின் ரசிகர்களுக்கு மிக பெரிய அதிர்ச்சியை கொடுத்தார்.  பெற்றோர் இன்றி அவர்களின் திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற்றது.  
திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடிப்பதில் சிரமமாக இருப்பதால் சீரியலில் இருந்து விலகுகிறேன் எனத் தெரிவித்தார். மலேசியாவில் செட்டிலாகப் போவதால் ஒவ்வொரு முறை ஷூட்டிங் சமயத்திலும் வந்து செல்வது கடினமாக இருப்பதாகத் தெரிவித்து இருந்தார் பிரியங்கா. அவர் தொடர்ந்து நடிக்காததற்கு பிரியங்காவின் கணவர் தான் காரணம் எனக் கூறப்பட்டது. பிரியங்காவின் வெள்ளந்தியான நடிப்பை மிகவும் மிஸ் செய்தார்கள் அவரின் தீவிர ரசிகர்கள்.
 
இனி பிரியங்கா நல்காரி நடிக்கப் போவதில்லை என நினைத்த போது திடீரென ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘நளதமயந்தி’ சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இது அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகவும் அதே நேரத்தில் சந்தோஷமாகவும் இருந்தது.
இந்நிலையில் பிரியங்கா நல்காரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் ராகுலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தையும் டெலீட் செய்துள்ளார். அதே போல பிரியங்காவின் கணவர் ராகுலும் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அகற்றியுள்ளார். இதனால் அவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 
மேலும், சமீபத்தில் ரசிகர்களுடன் லைவ் சாட் ஒன்றில் பேசிய பிரியங்கா நல்காரியிடம், ரசிகர் ஒருவர் “நீங்கள் சிங்கிளா?” எனக் கேட்டதற்கு ஆம் என பதில் அளித்துள்ளார். திருமணம் நடைபெற்று ஒரே ஆண்டில் இருவரும் பிரிந்துள்ளது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இரு தரப்பினரும் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.     

மேலும் காண

Source link