Pakistan Cricket: தொடர் சொதப்பலில் பாகிஸ்தான் அணி.. வீரர்களுக்கு என்ன பிரச்சனை? என்ன நடக்கிறது?

2024-ஆம் ஆண்டு தொடங்கியது யாருக்கு சாதகமாக அமைந்தாலும், பாகிஸ்தான் அணிக்கு மிகவும் மோசமாகவே உள்ளது. இந்த ஆண்டு பாகிஸ்தான் இதுவரை 5 சர்வதேச போட்டிகளில் விளையாடி, அதில் அனைத்திலும் தோல்வியை சந்தித்துள்ளது. இங்கு பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவிடம் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளிலும் விளையாடி தோல்வியடைந்தது.

கடந்த ஆண்டும் பாகிஸ்தான் அணிக்கு மிகவும் மோசமாக அமைந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியின் ஆட்டம் ஏமாற்றம் அளித்தது. இதனால் பாகிஸ்தான் அணி நிர்வாகத்திலும் கொந்தளிப்பு ஏற்பட்டு, வெளிநாட்டு பயிற்சியாளர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். தேர்வாளர்கள் முதல் கேப்டன் வரை பல முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்தன. இருப்பினும், இதையெல்லாத்தையும் மீறி பாகிஸ்தான் கிரிக்கெட் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப முடியவில்லை.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பாகிஸ்தான் அணி மொத்தம் 45 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், அந்த அணி வென்றதை விட அதிக போட்டிகளில் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது. பாகிஸ்தான் அணி மொத்தமாக விளையாடிய 20 போட்டிகளில் வெற்றியும், 22 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது. அதிலும், பாகிஸ்தான் அணி உள்நாட்டுப் போட்டிகளில் மட்டுமே அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளது. வெளிநாட்டு மண்ணில் தொடர்ந்து எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக எதையும் செய்யவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு திறமை இல்லாமல் போய்விட்டதா என்ற கேள்வி எழுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த அணி ஏன் ஒவ்வொரு வடிவத்திலும் மோசமாக செயல்படுகிறது? என்ன குறை இருக்கிறது? என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

பாகிஸ்தான் வீரர்களுக்கு திறமை இல்லையா..?

பாகிஸ்தான் அணியின் விளையாடும் அனைத்து வீரர்களும் திறமை இல்லாமல் ப்ளேயிங் 11 அணியில் இடம் பிடிக்கவில்லை. இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை போன்று பாகிஸ்தானில் நடைபெறும் பாகிஸ்தான் சூப்பர் லீக் நடைபெற்று வருகிறதி. இந்த லீக் தொடங்கப்பட்டதிலிருந்து, பாகிஸ்தான் அணி பல வீரர்களை கண்டறிந்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் திறமைகளை மெருகேற்றும் கலையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தக்கவைத்து கொள்ளாததே இதற்கு காரணம். திறமையான வீரர்கள் பாகிஸ்தான் அணிகளிலும் உள்ளனர் ஆனால் மற்ற நாடுகளுக்காக விளையாடும் கிரிக்கெட் வீரர்களை அந்நாட்டு வாரியம் சப்போர்ட் செய்வது போன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செய்வது இல்லை.

இந்தியா போன்ற மற்ற நாடுகளில் சீனியர், ஜூனியர், அண்டர் 19 என ஒவ்வொரு அணிக்கு நல்ல பயிற்சியாளர்கள் உள்ளனர். ஆனால் பாகிஸ்தான் அணியில் இவை அனைத்தும் இருந்தும் வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் குழு இடையே ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாததே இதற்கு காரணம்.

பற்றாக்குறை எங்கே?

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் அரசியல் ஆதிக்கம் அதிகளவில் இருந்து வருகிறது. தேசிய அளவில் வாரிய அதிகாரிகள் முதல் சிறிய அளவிலான அதிகாரிகள் வரை அரசியலில் சிக்கித் தவிக்கின்றனர். ஏதாவது நல்லது நடந்தால், ஒரு வீரர் சிறப்பாக செயல்பட்டாலோ அது குறைவாகவே பாராட்டப்படுகிறது. ஆனால் ஒரு சிறிய தவறு நடந்தால், எல்லோரும் அதை ஊதி ஊதி பெரிதாக்கி விடுகிறார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் பாகிஸ்தான் அரசைப் போலவே நிலையற்றதாகவே பார்க்கப்படுகிறது.

கடந்த 2022ம் ஆண்டு ரமீஸ் ராஜா நீக்கம், ஒட்டுமொத்த அணி நிர்வாகமும் மாற்றப்பட்டதோ, அதேபோல், கடந்த 2023ம் ஆண்டு வாரியம் மற்றும் அனைத்து பிரிவிலும் கேப்டன்கள் மாற்றப்பட்டனர். இந்த நடவடிக்கைகள் காரணமாக, வாரியமும் அரசியலில் சிக்கி தவிக்கிறது. இதனால், கிரிக்கெட்டில் சரியான திசை மற்றும் நல்ல முடிவுகளை எடுப்பதில் கவனகுறைவு ஏற்படுகிறது.

ஒரு மோசமான போட்டிக்கு பிறகு கேப்டன் மாற்றம்:

பாகிஸ்தான் அணிக்காக பாபர் அசாம் ஒரு சிறந்த கேப்டனாக செயல்பட்டார். அவருடைய தலைமையின் கீழ் பாகிஸ்தான் அணியும் சிறப்பாக செயல்பட்டது. ஆனால் 2023 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி  மோசமாக செயல்பட்டதால் கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் நீக்கப்பட்டார். கேப்டன் மாற்றம் மட்டுமின்றி தேர்வாளர் முதல் அணி இயக்குனர் வரை அனைத்து பிரிவும் மாற்றங்கள் நிகழ்ந்தன. சமீபத்தில் டெஸ்ட் விளையாடுவது குறித்த ஹரிஸ் ரவூப் விஷயத்தில், தேர்வாளர் வஹாப் ரியாஸின் செய்தியாளர் சந்திப்பு விவாதப் பொருளாக மாறியது. ஒட்டுமொத்தமாகவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த மாதிரி சிறிய பிரச்சினைகளை கூட தீர்க்க தெரியவில்லை. இதனால்தான் அந்த அணி ஒவ்வொரு வடிவத்திலும் தோல்விகளை சந்தித்து வருகிறது.

Source link