தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் கடந்த வாரம், ஜெயிலுக்கு போன சக்திக்காக வெற்றி பழியை ஏற்று கொண்டு ஜெயிலுக்கு போக ரங்கநாயகி அதிர்ச்சி அடைந்தாள். இதனை தொடர்ந்து வரும் நாட்களில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, ஷக்தி ப்ரியாவை கொன்றது யார் என்று கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் இறங்க பூஜா ரங்கநாயகியை ஏற்றி விட்டு வீட்டை விட்டு வெளியே துரத்த பிளான் போடுகிறாள். ஷக்தி வெளியே போயிருந்த நேரத்தில் அவளது துணிகளை மூட்டை கட்டி ஷக்தி வந்ததும் முகத்தில் தூக்கி எறிந்து இனிமே இந்த வீட்டிற்குள் வர கூடாது என்று சொல்ல ஹாஸ்பிடலில் இருந்து வீட்டிற்கு வரும் சரண்யா ஷக்தி வெளியே போனால் நானும் போய்டுவேன்.

அதுக்கப்புறம் நானும் அனாதையாகிடுவேன், எனக்கு பிறக்கிற குழந்தையும் அனாதையாகிடும், அப்பா இதையெல்லாம் நினைத்து நினைத்து சீக்கிரம் செத்து போய்டுவாரு, நீ இந்த பூஜாவை நம்பி சொத்து எல்லாத்தையும் இழந்து நடுரோட்டில் நிற்க போற என்று சொல்ல ரங்கநாயகி சக்தியை வீட்டிற்குள் விட்டு விடுகிறாள். பூஜா ஏன் இப்படி பண்ணீங்க என்று கேட்க வேறொரு பிளான் இருப்பதாக சொல்கிறாள் ரங்கநாயகி.

அடுத்து கார்த்திக் ப்ரியாவுக்கு காரிய சடங்குகளை செய்ய யமுனா நீங்க எதுக்கு அதெல்லாம் செய்யணும் என சண்டையிட அவ நான் கட்டிக்க இருந்த பொண்ணு, அவளுக்காக நான் செய்வேன் என பதிலடி கொடுக்க யமுனா அப்புறம் எதுக்கு எனக்கு இந்த தாலி என கோபப்பட கார்த்திக் அதை தான் நானும் சொல்றேன் என தாலியை பறித்து விடுகிறான். இதனால் மீனாட்சி அதிர்ச்சியில் இருக்க ரங்கநாயகி பஞ்சாயத்தை கூட்ட போவதாகவும் உங்க பொண்னு வந்து கூட்டிட்டி போங்க எனவும் ஷாக் கொடுக்கிறாள். பஞ்சாயத்து கூட ஷக்தி ஒரு சவாலையும் விடுகிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? ஷக்தி வாழ்க்கை என்னவாகும்? என்ற திருப்பங்களுடன் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.