Manjummel Boys Sreenath Bhasi Joins The Cast Of Cast of GV Prakash Starring Neelam Productions Next Movie


நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்தில் மஞ்சும்மல் பாய்ஸ்-ன் ஸ்ரீநாத் பாஷி இணைந்துள்ளார்.
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.  ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். 

A start to a new chapter✨The shoot for our next production begins today with bright smiles and fond memories🎆Written and directed by @AkiranMosesProduced by @beemji #NeelamProductionsStarring @gvprakash @Rshivani1@sreenathbhasi @PasupathyMasi @LingeshActor @EditorSelva… pic.twitter.com/P5KrELtXGX
— Neelam Productions (@officialneelam) February 29, 2024

இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் சார்பாக ’பரியேறும் பெருமாள்’, ‘ரைட்டர்’, ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’, ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை தயாரித்துள்ளார். அசோக்செல்வன் நடிப்பில் வெளியான ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஊர்வசி, அட்டகத்தி தினேஷ் நடித்த ’ஜெ.பேபி’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. 

A start to a new chapter✨The shoot for our next production begins today with bright smiles and fond memories🎆Written and directed by @AkiranMosesProduced by @beemji #NeelamProductionsStarring @gvprakash @Rshivani1@sreenathbhasi @PasupathyMasi @LingeshActor @EditorSelva… pic.twitter.com/P5KrELtXGX
— Neelam Productions (@officialneelam) February 29, 2024

 ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.  அவருடன் ஷிவானி ராஜசேகர், பசுபதி, ஸ்ரீநாத்பாஸி, லிங்கேஷ், ஷ்வாந்த் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளனர். பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அகிரன் மோசஸ் இந்த படத்தை இயக்குகிறார்.ரூபேஷ் சாஜி ஒளிப்பதிவு; செல்வா ஆர்.கே படத்தொகுப்பு. 
மஞ்ஞுமல் பாய்ஸ் ஹீரோ
சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியானப் படம் மஞ்சும்மல் பாய்ஸ். தமிழில் இப்படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று இப்படத்தில் படக்குழு நிச்சயமாக எதிர்பார்த்திருக்காது. மலையாள சினிமாவில் வரலாற்றில் அதி விரைவில் 100 கோடி வசூல் ஈட்டிய முதல் படம் என்கிற வரலாற்றை உருவாக்கிய படம் மஞ்சும்மல் பாய்ஸ். இதில் சுபாஷ் கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரீநாத் பாஷி நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் படத்தில் இணைந்துள்ளார் என்று படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க: Pa Ranjith: வசூலை விட படம் தரமானதா என்பதே முக்கியம்.. இயக்குநர் பா.ரஞ்சித் பேச்சு

மேலும் காண

Source link