Lokesh Kanagaraj Speak About LEO 2 Conform Thalapathy Vijay LCU | Lokesh Kanagaraj: லியோ 2 உருவாவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளது


தமிழ் சினிமாவில் தற்போது கவனிக்கப்படும் இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ என இவரது அனைத்து படங்களும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது. 
இப்படியான நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படம் இயக்கவுள்ளார். இதற்கான கதை தயாரிப்பு வேலைகளை லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது குழுவினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.  இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் லியோ. இந்த படத்தில் விஜய், அர்ஜுன், த்ரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தற்போது நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தில் நடித்து வருகின்றார். இதற்கடுத்து ஒரு படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். அதன் பின்னர் முழுநேர அரசியலில் விஜய் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார். இப்படியான நிலையில் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேசியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. 

His intentions,goal is different now, but if he permits time & calls me to work on it #Leo2 Is 100% Possible – director lokesh pic.twitter.com/4pWb32jTcQ
— Actor Vijay Fans (@Actor_Vijay) February 17, 2024

இது தொடர்பாக லோகேஷ் கனகராஜ், “ லியோ படத்தின் இரண்டாம் பாகம் அமைய எல்லா வாய்ப்புகளும் உள்ளது. ஆனால் அதற்கான நேரம் அமைய வேண்டும். தளபதி விஜயின் குறிக்கோள் வேறு எங்கோ உள்ளது. அதற்கு மிகப்பெரிய வாழ்த்துகள். லியோ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளது. தளபதி விஜய் எப்போது அழைத்தாலும் லியோ படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பாக சந்திக்க நான் தயாராக உள்ளேன். சூப்பர் ஸ்டார் படத்திற்கு இன்னும் ஓரிரு மாதங்களில் படப்பிடிப்புக்குச் செல்ல வாய்ப்புள்ளது” என தெரிவித்தார். 
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் விஜய் நடித்த லியோ படம் வெளியானது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் தயாரிப்பில் வெளிவந்த லியோ படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர் என பலர் நடித்திருந்தனர். படம் அறிவிக்கப்பட்டதில் இருந்து ரிலீசானது வரை பல்வேறு சர்ச்சைகள் எழுதாலும் பாக்ஸ் ஆபிஸ் வசூலை வாரி குவித்தது லியோ படம். 
 
லியோ படத்தின் பெரும்பலான காட்சிகள் ஜம்மு காஷ்மீரில் படமாக்கப்பட்டிருந்தது. இதனால், லியோ படத்தை காஷ்மீரில் படமாக்க அனுமதி அளித்த அப்பகுதி அரசு நிர்வாகத்திற்கும் நன்றி கூறி படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “காஷ்மீரில் லியோ படத்தை ஒத்துழைப்பு அளித்த ஜம்மு காஷ்மீர் அரசு, அதன் ஆளுநர் மனோஜ் சின்ஹா, தகவல் மற்றும் சுற்றுலாத்துறை என பாதுகாப்பு அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
காஷ்மீர் எப்போதும் எங்களின் எதிர்கால திட்டங்களின் ஒரு பகுதியாக இருக்கும். படப்பிடிப்பை சிரமமின்றி நடத்த உதவி செய்த அனைவருக்கும் பாராட்டுகள்” என கூறியிருந்தது. எதிர்கால திட்டத்தில் ஒரு பகுதியாக காஷ்மீர் இருக்கும் என செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தெரிவித்துள்ளதால், லியோ பாகம் 2 எடுக்கப்படும் என அப்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பான பேச்சாக இருந்தது. 

மேலும் காண

Source link