list of Singer Anuradha Sriram was singing songs with kollywood top heroes


1995 ஆம் ஆண்டு பம்பாய் படத்தில் இடம்பெற்ற மலரோடு மலர் இங்கு என்ற பாடல் மூலம் திரைத்துறையில் அனுராதா ஸ்ரீராம் அறிமுகமானார். தொடர்ந்து இந்திரா படத்தில் இடம்பெற்ற அச்சம் அச்சம் இல்லை பாடலும், மின்சார கனவு படத்தில் இடம்பெற்ற அன்பென்ற மழையிலே பாடலும் அவரை மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடத்தில் கொண்டு சேர்த்தது. 
 தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள அனுராதா ஸ்ரீராம், தனது 6வது வயதிலேயே இசைப்பயிற்சியைத் தொடங்கிவிட்டார்.குழந்தை நட்சத்திரமாக  ‘காளி’ என்ற படத்திலும் நடித்துள்ளார். இப்படியான நிலையில் இவர் ஹீரோக்களுடன் இணைந்து பாடிய 6 பாடல்கள் பற்றி காணலாம். 
விஜய்
கடந்த 2000 ஆம் ஆண்டு விஜய்,சிம்ரன், விவேக், தலைவாசல் விஜய் என பலரும் நடித்த படம் ‘பிரியமானவளே’. செல்வபாரதி இயக்கிய இந்த படத்திற்கு எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்திருந்தார். இப்படத்தில் வாலி எழுதிய “மிஸ்ஸிஸிப்பி நதி குலுங்க குலுங்க” என்ற பாடலை நடிகர் விஜய்யுடன் இணைந்து அனுராதா ஸ்ரீராம் பாடியுள்ளார். 

சரத்குமார்
2004 ஆம் ஆண்டு ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் சரத்குமார், நமீதா, வடிவேலு, கலாபவன் மணி என பலரும் நடித்த படம் ‘ஏய்’. இந்த படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்த நிலையில் இதில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாயின. அதில், ‘ஓர் ஒன்னும் ஒன்னு’ என்ற பாடலை நடிகர்கள் சரத்குமார், வடிவேலு, பறவை முனியம்மா ஆகியோருடன் இணைந்து அனுராதா ஸ்ரீராம் பாடியுள்ளார். 

தனுஷ் 
2004 ஆம் ஆண்டு பூபதி பாண்டியன் இயக்கத்தில் தனுஷ், ஸ்ரீதேவி, மயில்சாமி, கருணாஸ், குணால் உள்ளிட்ட பலரும் நடித்த படம் ‘தேவதையைக் கண்டேன்’. தேவா இசையமைத்த இப்படத்தில் ‘துண்டக்காணும் துணியைக் காணும்’ பாடல் இடம் பெற்றது. இதனை நடிகர் தனுஷூடன் இணைந்து அனுராதா ஸ்ரீராம் இப்பாடலை பாடியிருந்தார். 

வடிவேலு 
1998 ஆம் ஆண்டு கே. கிருஷ்ணன் இயக்கத்தில் ராஜ்கிரண் , குஷ்பு, வினிதா, ன் மணிவண்ணன் , வடிவேலு , R. சுந்தர்ராஜன் , வெண்ணிற ஆடை மூர்த்தி , விட்டல் ராவ் என பலரும் நடித்த படம் ‘பொண்ணு விளையிற பூமி’. இந்த படத்தில் வாலி எழுதிய “போயா உன் மூஞ்சில” என்ற பாடலை நடிகர் வடிவேலுடன் இணைந்து அனுராதா ஸ்ரீராம் பாடியிருந்தார். 

மேலும் காண

Source link