Legend Saravanan: லெஜண்ட் சரவணன் இரண்டாவது படத்தின் படப்பிடிப்பு எப்போது என்பதை அவரே தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
லெஜண்ட் சரவணன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளான ஹன்சிகா மற்றும் தமன்னாவுடன் இணைந்து விளம்பரம் ஒன்றில் அதிரடியாக எண்ட்ரி கொடுத்து தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தியவர் “லெஜண்ட் சரவணன்”.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2022ஆம் ஆண்டு ‘தி லெஜெண்ட்’ என்ற படத்தில் இவர் நடித்திருந்தார். சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களின் விளம்பரங்களை இயக்கி வந்த இரட்டை இயக்குநர்களான ஜேடி-ஜெர்ரி தான் இப்படத்தை இயக்கி உள்ளார். மேலும், ஹாரிஸ் ஜெராஜ் இசையமைத்த நிலையில், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்தார்.
இந்த படத்தில் சரவணணுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தாலா நடித்திருந்தார். மேலும், விவேக், ரோபோ சங்கர், தேவதர்ஷினி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த படம் சுமார் 5 மொழிகளில் 2500 தியேட்டர்களில் படம் வெளியாகி ரசிகர்கள் சரவணன் அப்படி என்ன செய்திருக்கிறார் என்பதை பார்ப்பதற்காகவே தியேட்டர்களுக்கு படையெடுத்தனர்.
ஏப்ரலில் படப்பிடிப்பு:
படம் குறித்து கலவையான விமர்சனங்கள் பெற்றாலும், லெஜண்ட் சரவணனின் நடிப்பு குறித்து சிலர் கிண்டலாகவும், சிலர் அவரின் துணிச்சலான முயற்சியை பாராட்டியும் உள்ளனர். திரையில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில், ஓடிடியிலும் வெளியாகி அதிகமாக வியூஸ்களை பெற்றுள்ளது.
உறவினர் திருமண விழாவில் சொந்த பந்தங்களுடன்…ஏப்ரலில் படப்பிடிப்பு ஆரம்பம்…#legend #Anbanavan#legendsaravanan pic.twitter.com/dZbWhtYQFN
— Legend Saravanan (@yoursthelegend) February 23, 2024
இந்த நிலையில், அடுத்ததாக எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாசு உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜெண்ட் சரவணன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் குறித்து அடுத்தடுத்து அப்டேட்கள் வரும் நிலையில், படத்தின் சூட்டிங் குறித்து லெஜெண்ட் சரவணன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
அதன்படி, ஏப்ரல் மாதத்தில் தன்னுடைய அடுத்த படத்தின் சூட்டிங் தொடங்க உள்ளதாக தெரிவித்திருக்கிறார். எனவே, விரைவில் இந்த படம் குறத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதே பதிவில் உறவினர் திருமண விழாவில் உறவினர்களுடன் கலந்து கொண்டதாக தெரிவித்தார்.
இந்த திருமண விழாவிற்கு கோட் சூட்டில் ஸ்டைலிஷாக வந்து இறங்கி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். தன்னுடன் செல்ஃபி எடுக்க வந்த அனைவருடனும் புகைப்படம் எடுத்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க
Ranam:G.O.A.T. பட ஷூட்டிங் ஸ்பாட்டில் வைபவ்காக வெங்கட் பிரபு வெளியிட்ட வீடியோ – என்ன காரணம்?
மேலும் காண