Kavin: வெற்றிமாறன் படத்தில் நடிக்கும் கவின்.. வெளியான சூப்பர் அப்டேட் இதோ!
கவினின் அடுத்த புதுப்படம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரான வெற்றிமாறன் தான் இந்த படத்தை தயாரிக்கவுள்ளார். கிராஸ் ரூட் கம்பெனி இப்படத்தை தயாரிக்க வெற்றி மாறனின் உதவி இயக்குநரான விகர்னன் அசோகன் இயக்கவுள்ளார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படிக்க
Udhayam Theatre: கண்ணீர் வடிக்கின்றேன்.. உதயம் தியேட்டர் மூடப்படுவதால் வைரமுத்து வேதனை!
சென்னையின் முக்கிய அடையாளமாக கருதப்படும் உதயம் தியேட்டர் மூடப்படுவதாக தகவல் வெளியாகி திரையுலக ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து உதயம் தியேட்டர் தொடர்பான பதிவு ஒன்றை தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க
Ramki: நிரோஷாவே வேண்டாம் என சொல்லியும் கேட்கல.. நடிகர் ராம்கி பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!
நேர்காணல் ஒன்றில் பேசிய ராம்கி, நிரோஷாவுடன் தனக்கு காதல் ஏற்பட்ட தருணம் பற்றி பேசியுள்ளார். அதில்,”நிரோஷாவை என்னிடம் அறிமுகம் செய்தபோது அவர் கமலுடன் சூரசம்ஹாரம் படத்தில் நடித்து வந்தார். எந்த பத்திரிக்கை எடுத்தாலும் அட்டைப்படத்தில் இடம்பிடித்தார். நிரோஷாவின் பின்னணி என்பது வேற லெவலில் இருந்தது. அக்னி நட்சத்திரம் படத்தில் நடித்த அவரை செந்தூரப்பூவே படத்தில் ஹீரோயினாக போடலாம் என சொன்னார்கள். ஆனால் நான், ‘இவங்க வேண்டாம். நல்ல பொண்ணா நான் சொல்றேன்’ என சொன்னேன்.மேலும் படிக்க
SPB Pallavi: பல ஆண்டுகளாக பாடாமல் இருக்கும் எஸ்.பி.பி., மகள் பல்லவி – என்ன காரணம் தெரியுமா?
தான் ஏன் பாடவில்லை என்பதை பல்லவி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அப்பா என்னிடம் நிறைய கிளாசிக்கல் இசை கற்றுக் கொள்ள சொன்னார். ஆனால் எனக்கும் தம்பிக்கும் பெரிதாக விருப்பமில்லை. எஸ்.பி.பி.யின் பையன், பொண்ணு என்று சில வாய்ப்புகள் வந்தது. ஒரு சில காரணங்களுக்காக நான் பாடுவதை நிறுத்தி விட்டேன். குடும்பத்தினருடன் பிஸியாகி விட்டதால் அதனால் விருப்பம் போய்விட்டது. ஆனால் முறைப்படி பயிற்சி எடுக்காமல் மீண்டும் களமிறங்கினால் அது சரியாக இருக்காது. நான் நியாயமாக இருக்கிறேன் என்று சொல்வதை விட அப்பாவின் பெயரை கெடுக்காமல் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். மேலும் படிக்க
Yezhu Kadal Yezhu Malai: மறுபடியும் நீ.. என் தோழி ஆவாயா..! மனதை உருக்கும் ஏழு கடல் ஏழு மலை முதல் பாடல் ரிலீஸ்
ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் 53வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் ‘பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்’ தேர்வாகி இருந்தது. இந்த நிலையில் ஏழுமலை ஏழு கடல் படத்தின் முதல் பாடலான ‘மறுபடி நீ’ பாடல் இன்று வெளியாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த பாடலுக்கு மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த பாடலை நடிகரும் பாடகருமான சித்தார்த் பாடியுள்ளார். இந்த பாடல் மெலடி பாடலாக உள்ளதால், பெரும்பான்மையான ரசிகர்களின் மனதை வென்றுள்ளது. மேலும் படிக்க
மேலும் காண