kavin starrer elan directed star making video glimpse released


இயக்குநர் இளன் இயக்கி கவின் நடித்து வரும் ஸ்டார் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இளன் இயக்கும் இரண்டாவது படம் ஸ்டார். கவின் கதாநாயகனாக நடிக்க அதிதி எஸ் போஹன்கர் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் இதற்கு முன்பாக சிவாஜி கணேசனும் சுருளி நாச்சியாரும் என்கிற படத்தில் நடித்துள்ளார். ஸ்டார் படத்தில் இவர் ஜிமிக்கி என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாக கடந்த சில நாட்கள் முன்பாக படக்குழு தகவல் வெளியிட்டது. யுவன் ஷங்கர்  ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் பி.வி.எஸ்.என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளார்கள். 
நாயகனாகும் கவின்
விஜய் தொலைக்காட்சியில்  ஒளிபரபரப்பான ’கனா காணும் காலங்கள்’ தொடரின் மூலம்  பிரபலமானவர் நடிகர் கவின். தொடர்ந்து சரவணன் மீனாட்சியில்  நடித்து பரவலான கவனம் ஈர்த்தார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு பின் அவருக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. வினீத் வரபிரசாத் இயக்கத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான லிஃப்ட் படத்தில் கதாநாயகனாக நடித்தார் கவின். கவின் நடிப்பு பாராட்டப் பட்டாலும்  இந்தப் படம் பெரியளவில் கவனிக்கப் படவில்லை, இந்நிலையில் கடந்த ஆண்டு கணேஷ் கே பாபு இயக்கத்தில் வெளியான டாடா படம் கவினுக்கு பெரிய ப்ரேக் கொடுத்தது.
சமீபத்தில் சாந்தனு மற்றும்  அசோக் செல்வன்  நடித்து வெளியான ப்ளூ ஸ்டார் படத்தின் இயக்குநர் ஜெய் நேர்காணல் ஒன்றில்  ப்ளூ ஸ்டார் படத்தின் முதலில் கவின்  நடிக்க இருந்ததாகவும் ஆனால் அவரது பிஸியான ஷெட்டியூல் காரணமாக இந்தப் படத்தில் அவர் நடிக்க முடியாமல் போனதாகவும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து தற்போது அவர் நடித்து வரும் படம் ஸ்டார்.  நடிகனாக விரும்பும் ஒருவனின் கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.
சமீபத்தில் ஸ்டார் படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் மேக்கிங் வீடியோ இன்று வெளியாகியுள்ளது. 

#STAR in the making glimpse ⭐️https://t.co/NuKrWTwJ4J#STARMOVIE ⭐ #KAVIN #ELAN #YUVAN #KEY@Kavin_m_0431 @elann_t @thisisysr @aaditiofficial @PreityMukundan @LalDirector @riseeastcre @SVCCofficial @Pentelasagar @BvsnP @RajaS_official @Sunilofficial @Ezhil_DOP pic.twitter.com/5zbC3Ygeha
— Elan (@elann_t) February 15, 2024
தற்போது வெளியாகியிருக்கும் இந்த மேக்கிங் வீடியோ க்ளிம்ப்ஸ் ஸ்டார் படத்தில் இருந்து சில காட்சிகளை மட்டுமே கொண்டிருக்கிறது. முழு மேக்கிங் வீடியோ நாளை மாலை ஆறு மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது

மேலும் காண

Source link