Karthigai Deepam: காயப்படும் தீபா.. கடத்தப்படும் அபிராமி.. கார்த்திக் செய்யப் போவது என்ன? கார்த்திகை தீபம் அப்டேட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலை நேற்றைய எபிசோடில் கார்த்திக்கு அபிராமி குறித்த தகவல் தெரிய வந்து காஞ்சிபுரம் கோவிலுக்கு கிளம்பி வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது, கார்த்திக் கோயிலை நெருங்கும் நேரத்தில் அபிராமியை ரவுடிகள் கடத்தி விடுகின்றனர். உடனே கார்த்திக் வண்டி நம்பர் நோட் செய்து போலீசுக்கு தகவல் கொடுக்க, கார்த்தியும் அபிராமியை தேடத் தொடங்குகிறான்.

இதற்கிடையில் அபிராமிக்கு காயம் ஏற்பட, அவளை ஹாஸ்பிடல் அழைத்துச் செல்கிறான் கார்த்திக். பிறகு போலீஸ் கார்த்திக்கு போன் போட்டு “ரவுடிகள் இந்த ஏரியாவை விட்டு தாண்டி இருக்க வாய்ப்புள்ளது. இங்கதான் எங்கேயாச்சும் இருக்கணும் சீக்கிரம் தேடி கண்டுபிடித்து விடலாம்” என்று சொல்லி ஃபோனை வைக்கின்றனர்.

மறுபக்கம் ரவுடிகள் அபிராமியை ஒரு குடோனுக்குள் அடைத்து வைக்க, இங்கே தீபா “அபிராமி அத்தையை இங்கதான் பக்கத்துல எங்கயாச்சும் மறைத்து வைத்திருக்கணும், ஏதாச்சும் குடோன்களில் தேடிப் பார்க்கலாம்” என்று சொல்ல போலிஷ், கார்த்திக், தீபா என எல்லோரும் கிளம்பி செல்கின்றனர்.

போலீஸ் உடன் கார்த்திக் தீபா வருவதைப் பார்த்த ரவுடிகள் அபிராமியை அங்கிருந்து பொருட்களை வைத்து மூடி வைக்கின்றனர். கார்த்திக் குடோனுக்குள் நுழைந்து அபிராமி தேடி பார்க்க எங்கும் யாரும் இல்லாததால் குழப்பம் அடைகிறான்.

இந்த நேரத்தில் கண் வழிக்கும் அபிராமி கார்த்திக்கு எப்படியாவது தான் இங்கே இருப்பதை தெரியப்படுத்த வேண்டும் என முயற்சி செய்கிறாள். ஆனால் எதுவும் செய்ய முடியாத நிலையில் கார்த்திக் அங்கிருந்து கிளம்பி வெளியே வரும்போது அபிராமி பக்கத்தில் இருந்த ஒரு பொருள் கீழே விழுகிறது. இந்த சத்தத்தைக் கேட்டு கார்த்திக் அபிராமியை தேடி கண்டு பிடிப்பானா இல்லையா என்ற பரபரப்புடன் இந்த கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.

Source link