Karthigai Deepam: அப்பா பாடல் பாடி முடித்த தீபா: உண்மையை சொன்ன கார்த்திக்: கார்த்திகை தீபம் இன்றும் நாளையும்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தர்மலிங்கம் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட தீபா பாட கிளம்ப கார்த்திக் உண்மையை மறைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது, கார்த்திக் தீபாவை ஸ்டுடியோவிற்கு அழைத்து வந்து விட, இசையமைப்பாளர் ரக்ஷன் பாடலை கொடுத்து இது தான் நீங்க பாட வேண்டியது என்று சொல்ல, தீபா அது அப்பா பாடலாக இருப்பதை பார்த்து எமோஷனலாகிறாள். உடனே அப்பா கிட்ட பேசணும் என்று ஏங்குகிறாள்.

ஜானகிக்கு போன் செய்ய, அவர் அப்பா முருகன் கோயிலுக்கு போய் இருக்கார் என்று பொய் சொல்லி போனை வைக்கிறார். ஹாஸ்பிடலில் டாக்டர்கள் தர்மலிங்கத்தின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக சொல்கின்றனர். கார்த்திக் ஹாஸ்பிடல் பார்மில் கையெழுத்து போட்டு கொடுக்கிறான்.

மறுபக்கம் கோகிலா தீபாவுக்கு தர்மலிங்கம் ஹாஸ்பிடலில் இருக்கும் விஷயத்தைச் சொல்லி அவள் பாடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிளான் போட்டு ஸ்டூடியோவிற்கு கிளம்பி வர, அவளை உள்ளே விட மறுக்கின்றனர். அடுத்து தீபா எந்தவொரு தடங்கலும் இல்லாமல் பாடி முடிக்கிறாள். ரக்சன் பாடியதற்கான பணத்தை செக்காக கொடுக்க தீபா மிகுந்த சந்தோசம் அடைகிறாள்.

இதை உடனே அப்பா கிட்ட கொடுக்க வேண்டும் என்று கிளம்ப, கார்த்திக் அவளை பிக்கப் செய்து அழைத்து செல்கிறான். போகும் வழியில் தீபா காரை நிறுத்தச் சொல்லி அப்பாவுக்கு பிடித்தவற்றை வாங்க, கார்த்திக் தர்மலிங்கம் ஹாஸ்பிடலில் இருக்கும் விஷயத்தை சொல்ல தீபா உடைந்து போகிறாள். கண்ணீருடன் அப்பாவை பார்க்க ஹாஸ்பிடலுக்குள் ஓடி வருகிறாள். இப்படியான நிலையில் இந்த வார கார்த்திகை தீபம் எபிசோட்கள் நிறைவடைகின்றன.

Source link