தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கனா. பிரிந்து கிடக்கும் அப்பா மகள் எப்படி ஒன்று சேர்க்கிறார்கள் ஓட்டப் பந்தய போட்டியில் தடைகளைத் தாண்டி நாயகி எப்படி சந்திக்கிறாள் என்பது தான் இந்த சீரியலின் கதைக்களம்.
இந்த சீரியலில் நாயகியாக தர்ஷனா, அன்பரசி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். உன்னி கிருஷ்ணன் நாயகனாகவும் 90களின் நடிகை கீர்த்தனா உள்ளிட்ட மற்றும் பலர் முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகின்றனர். அன்பரசியாக நடித்து வரும் தர்ஷனா திருமணம் காரணமாக இந்த சீரியலில் இருந்து வெளியேற போவதாக ஏற்கெனவே தகவல்கள் பரவிய நிலையில் தற்போது இந்த சீரியலில் இருந்து அவர் வெளியேறி விட்டதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
மேலும் அவருக்கு பதிலாக தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமான டோனிஷா என்பவர் கனா சீரியலில் நடிக்க இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் முதல் இவரது காட்சிகள் இடம்பெறும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
டோனிஷா தெலுங்கில் ஹிட்லர் காரி பெல்லம் என்ற சீரியலிலும், மலையாளத்தில் பலுங்கு என்ற சீரியலிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: VJ Adams: அட.. சன் மியூசிக் தொகுப்பாளர் ஆடம்ஸ நியாபகம் இருக்கா.. அவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் இதுதான்!
Hotspot: படம் பிடிக்கலனா செருப்பால் அடிங்க.. ஹாட்ஸ்பாட் பட இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் வேதனை!
மேலும் காண