2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலே பிரபலம் ஆனவர் அனுபமா பரமேஸ்வரன்.இவர் தமிழில் கொடி சைரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.நடிப்பை தாண்டி மணியரயிலே அசோகனின் OTT படத்திற்கு துணை இயக்குநராக பணியாற்றி இருக்கிறார் அனுபமா.கோட்டயத்தில் உள்ள சிஎம்எஸ் கல்லூரியில் கம்யூனிகேட்டிவ் ஆங்கிலத்தில் இளங்கலை படித்த அனுபமா, கலை மற்றும் கல்வி இரண்டிலும் சிறந்து விளங்கியுள்ளார்.அனுபமா, ஒரு தீவிர செல்லப்பிராணிகளில் பிரியை. இவர் விலங்குகளின் நல்வாழ்வு குறித்து சமூக வலைதளங்களில் அவ்வப்போது பதிவிடுவது வழக்கம்.கூடுதலாக அனுபமா, இசையிலும் ஆர்வம் உடையவர். தனது இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்போது பாடல்கள் பாடி பதிவிடுவார்.மேலும் ஓவியங்கள் மேல் ஆர்வம் கொண்ட அனுபமா, தனது கலைகளுக்கென்றே தனியாக இன்ஸ்டா பக்கத்தை நடத்தி வருகிறார்.
Published at : 03 Apr 2024 06:01 PM (IST)
Tags : Anupama Parameswaran Actress Photos
பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி
மேலும் காண