Guntur Kaaram Boxoffice Collection Mahesh Babu Starring Movie Day 1 Collection Details

டோலிவுட்டில் சங்கராந்தி ரிலீசாக பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள திரைப்படம் “குண்டூர் காரம்”
பிரபல இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் டோலிவுட் சூப்பர் ஸ்டார் எனக் கொண்டாடப்படும் மகேஷ் பாபு மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் “குண்டூர் காரம்”. குண்டூர் மிளகாயின் காரத்தை பிரதிபலிக்கும் வகையில் அக்கட தேசத்து ஆக்‌ஷன் மசாலாவாக பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் நேற்று (ஜன.12) சங்கராந்தி ரிலீசாக வெளியானது.
ஸ்ரீ லீலா ஹீரோயினாக நடிக்க,  மீனாட்சி சௌத்ரி, ஜெகபதி பாபு, ஜெயராம், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். தெலுங்கில் சங்கராந்தி ரிலீசில் ஹனுமன் படம் மட்டுமே குண்டூர் காரத்துடன் போட்டி போட்ட நிலையில், தமிழ் டப்பிங் படங்களான அயலான், கேப்டன் மில்லர் படங்களில் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது.
இதனால் ஒரே உச்ச நடிகரின் படமாக சங்கராந்தி ரேஸில் போட்டியிட்ட குண்டூர் காரம் வசூலை வாரிக் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விமர்னசங்களைப் பொறுத்தவரை எதிர்பார்ப்புகளுக்கு மாறாக நேற்று முதல் இணையத்தில் நெகட்டிவ் விமர்சனங்கள் படையெடுத்து வருகின்றன. தாய் – மகன் செண்டிமெண்ட் இந்தப் படத்தில் எதிர்பார்ப்பை பூர்த்தி செயவில்லை என்றும், மகேஷ் பாபு மட்டுமே தனி ஆளாக படத்தைக் காப்பாற்றுகிறார் என்றும் அவரது ரசிகர்களே இணையத்தில் புலம்பி வருகின்றனர்.
ஆனால் மற்றொருபுறம் நெகட்டிவ் விமர்சங்களுக்கு மாறாக குண்டூர் காரம் திரைப்படம் வசூலில் மாஸ் காண்பித்து வருகிறது. பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளைப் பகிரும் சாக்னிக் தளத்தின் படி முதல் நாளில் மட்டும் குண்டூர் காரம் இந்தியா முழுவதும் 48.7 கோடிகளை வசூலித்துள்ளது. 
உலகம் முழுவதும் இப்படம் 68.70 கோடிகளை வசூலித்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக தெலுங்கு படங்களுக்கு பெரும் ஓப்பனிங்கும் இருக்கும் நிலையில், ஆந்திரா மற்றூம் தெலங்கானா மாநிலங்களில் மட்டும் இப்படம் பெரும் 43.5 கோடிகளை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
 

*Guntur Kaaram Day 2 Morning Occupancy: 34.84% (Telugu) (2D) #GunturKaaram https://t.co/7Qf50NWm9w*
— Sacnilk Entertainment (@SacnilkEntmt) January 13, 2024

மகேஷ் பாபுவின் படங்களில் முதல் நாளில் அதிகம் வசூலித்த மூன்றாவது படமாக குண்டூர் காரம் உருவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
 

Source link