கோட் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது ரஷ்யா நாட்டின் தலைநகரான மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது.
மக்களவைத் தேர்தல் 2024
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தல் நாள் நெருங்கி வரும் சூழலில் நடிகர் விஜய் கோட் படத்தின் படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார். இந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட இருப்பதாகவும் விஜய் தனது அறிக்கையில் தெரிவித்திருதார். தற்போது த.வி,க கட்சிக்கான உறுப்பினர் செர்க்கைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
மாஸ்கோவின் விஜய்
தற்போது விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. பிரஷாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மோகன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை , ஹைதராபாத், இலங்கை, தாய்லாந்து, இஸ்தான்புல் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. தற்போது இறுதிக்கட்டமாக படப்பிடிப்பு ரஷ்யா நாட்டில் தலைநகரான மாஸ்கோவில் தொடங்கியுள்ளது. தேர்தல் நேரத்தில் விஜய் படப்பிடிப்புக்காக வெளி நாடு சென்றுள்ளது விஜய் வாக்களிபாரா இல்லையா என்கிற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
#TheGreatestOfAllTime – Next Schedule Begins in Russia.. 💥 Said to be the Final schedule.. 🤙First Single releasing on Coming Week..✌️#ThalapathyVijay | #VenkatPrabhu pic.twitter.com/ntLQMLeRFn
— Laxmi Kanth (@iammoviebuff007) April 7, 2024
கடந்த முறை விஜய் தனது சைக்கிளில் வந்து வாக்களித்தது பெரியளவில் வைரலானது. இந்த முறையும் அவர் அப்படி வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கார்த்திருக்கிறார்கள். ஆனால் தேர்தல் நாளுக்குள் விஜய் இந்தியா வந்து சேர்வாரா என்கிற கேள்வி நீடித்து வருகிறது. இப்படியான நிலையில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதிக்குள் கோட் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்துவிடும் என்றும் படப்பிடிப்பு முடிந்து விஜய் இந்தியா திரும்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி 69
கோட் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்க இருக்கும் கடைசி படம் தளபதி 69. இப்படத்தை யார் இயக்கப் போகிறார் என்பது புதிராக இருந்து வருகிறது. ஒரு மாதத்திற்கு ஒருவர் இந்தப் படத்தை இயக்கப் போவதாக பலவிதமான தகவல்கள் வெளியானபடி இருக்கின்றன. தற்போது தளபதி 69 படத்தை எச் வினோத் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த் தகவல் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் படாதது குறிப்பிடத் தக்கது.
மேலும் காண