Vijay: பெண்ணின் மனதை தொட்டு படத்தில் பிரபு தேவாவுக்கு பதிலாக முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது விஜய் தான் என்று இயக்குநர் எழில் கூறியுள்ளார்.
1999 ஆம் ஆண்டு விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான எழில் தனது இரண்டாவது படமாக எடுத்தது பெண்ணின் மனதை தொட்டு. இந்த இரண்டு படங்களின் வெற்றியும் அவரை கோலிவுட்டில் கவனிக்கத்தக்க இயக்குநராக மாற்றியது. எழிலின் இரண்டாவது படமாக ‘பெண்ணின் மனதை தொட்டு’ படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. படத்தில் சரத்குமார், பிரபுதேவா, ஜெயா சீல், விவேக், தாமு என பலரும் நடித்திருந்தனர். எஸ்.ஏ.ராஜ்குமார் படத்திற்கு இசையமைத்திருந்தார்.
படத்தில் இடம்பெற்றிருந்த ‘கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா’ பாடல் இன்றளவும் ரசிகர்களின் பேவரைட் என்றே சொல்லலாம். கதை, பாடல் மட்டுமில்லாமல் படத்தில் இடம்பெற்றிருந்த விவேக் காமெடி பேசப்படுவது. இந்த நிலையில் பெண்ணின் மனதை தொட்டு படம் குறித்து அதன் இயக்குநர் எழில், நடிகர் சித்ரா லஷ்மணனுடன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், பெண்ணின் மனதை தொட்டு படத்தில் முதலில் விஜய் நடிக்க இருந்ததாக எழில் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ”நான் பிரபுதேவாவின் தீவிரமான ரசிகன். அவரது டான்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரை வைத்து படம் எடுக்கும்போது போஸ் கொடுப்பது குறித்து சொல்லி கொடுத்தேன். அப்போது ஹீரோயின் வைத்து பிரபுதேவா வைத்த போட்டோஷூட்டை பார்த்து அசந்து போனேன். என்ன சீன் சொன்னாலும் அதை பிரபுதேவா பாடலாக மாற்றிவிடுவார். அந்த படத்தில் ஒரு பாடலின் சீனுக்காக ஆறு டேக் எடுத்தும் அசராமல் அதே எனர்ஜியுடன் பிரபுதேவா நடித்துக் கொடுத்தார்” என பேசியுள்ளார்.
தற்போது விஜய், பிரபுதேவா இருவரும் இணைந்து வெங்கட்பிரபு இயக்கும் தளபதி 68 என்ற கோட் படத்தில் நடித்து வருகின்றனர். 13 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் மற்றும் பிரபுதேவா ஒன்றாக இணைந்து போக்கிரி மற்றும் வில்லு படத்தில் பணியாற்றி உள்ளனர். அதன்பிறகு தற்போது மீண்டும் கோட் படத்தின் மூலம் இருவரும் இணைந்துள்ளனர். கோட் படத்தின் படப்பிடிப்புகள் தீவிரமாக நடந்து வருகிறது. புதுச்சேரியில் படப்பிடிப்பில் இருந்த விஜய் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலானது.
மேலும் காண