Deepika padukone ranveer singh expect their baby know full details


பாலிவுட் திரையுலகின் மிகவும் பிரபலமான லவ்லி ஜோடிகள் ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் தம்பதி. இவர்கள் இருவரும் முதன் முதலில் சஞ்சய் லீலா பன்சாலியின் கோலியன் கி ராஸ்லீலா ராம்-லீலா படத்தில் இணைந்து நடித்தனர். அதை தொடர்ந்து பாஜிராவ் மஸ்தானி மற்றும் பத்மாவத் படத்தில் ஜோடி சேர்ந்தனர். அந்த சமயத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பை தொடர்ந்து இருவரும் ஆறு வருடங்களாக டேட்டிங் செய்து வந்தனர். பின்னர் 2018ம் ஆண்டு இத்தாலியின் லேக் கோமோவில் அசத்தலாக திருமணம் செய்துகொண்டனர். அவர்களின் ஐந்தாவது ஆண்டு திருமண விழாவை பெல்ஜியத்தில் கொண்டாடினர். 
குழந்தைகளுக்கு எதிர்பார்ப்பு:
சமீபத்தில் தீபிகா படுகோன் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் அவர் பேசுகையில் ரன்வீருக்கு தனக்கும் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். எங்களுக்கான ஒரு குடும்பத்தை தொடங்கும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என கூறி  இருந்தார். 
 

மேலும் அவரின் குடும்பத்தினர் பற்றி அவர் பேசுகையில் “என்னை வளர்த்த என்னுடைய அத்தை, மாமா மற்றும் குடும்ப நண்பர்கள் அனைவருமே நான் அப்படியே இருக்கிறேன். சிறிதும் மாறவே இல்லை என கூறுவார்கள். தொழிலில் பணம், புகழ், பெயரை சம்பாதித்த பிறகு ஒருவர் மாறி விடுவது என்பது எளிது. ஆனால் என்னுடைய வீட்டில் என்னை யாருமே ஒரு பிரபலத்தை நடத்துவது போலவே நடத்த மாட்டார்கள்.
முதலில் நான் என் பெற்றோருக்கு மகள், உடன்பிறந்தவர்களுக்கு ஒரு சகோதரி. அது என்றுமே மாறுவதை நான் விரும்பவில்லை. எங்களின் குடும்பம் எங்களை அடித்தளமாக வைத்திருக்கிறது. ரன்வீரும் நானும் எங்களுடைய குழந்தைகளை அதே மதிப்புடன் தான் வளர்ப்போம் என நம்புகிறோம். 
தீபிகா படுகோனா கர்ப்பமா?
அந்த வகையில் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் இருவரும் அவர்களின் முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என கூறப்படுகிறது. தீபிகா இரண்டு அல்லது மூன்று மாத கர்ப்ப காலத்தில் இருக்கலாம் என கூறப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற 77 வது பாஃப்டா சர்வதேச விருது வழங்கும் விழாவின் ரெட் கார்பெட்டில் கலந்து கொண்ட போது தீபிகா தன்னுடைய வயிற்று பகுதியை மறைப்பது போல பளபளப்பான புடவையில் தோன்றியிருந்ததால் அவர் கர்ப்பமாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.
 

சமீபத்தில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியான அதிரடி ஆக்ஷன் திரில்லர் ஜானர் படமான ‘ஃபைட்டர்’ படத்தில் ஹிருத்திக் ரோஷன் ஜோடியாக தீபிகா நடித்திருந்தார். அனில் கபூர், கரண் சிங் குரோவர் மற்றும் அக்ஷய் ஓபராய் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தற்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் வரலாற்று படமான கல்கி 2898 AD படத்தில் நடிகர் பிரபாஸ் ஜோடியாக நடித்து வருகிறார். அமிதாப் பச்சன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் வரும் மே 9ம் தேதி வெளியாக உள்ளது. 
ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் நடிகர் ரன்வீர் சிங் போலீஸ் கேரக்டரில் சிங்கம் அகைன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் தீபிகா, அஜய் தேவ்கன், அக்ஷய் குமார், டைகர் ஷெராஃப், அர்ஜுன் கபூர் மற்றும் கரீனா கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இது ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக உள்ளது. அதை தவிர ரன்வீர் ஃபர்ஹான் அக்தர் இயக்கத்தில் டான் 3 படத்திலும் நடிக்க உள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

மேலும் காண

Source link