cinema headlines today march 29th tamil cinema news today Prithviraj Sukumaran Actress Samyuktha



Actress Samyuktha: விபத்தில் சிக்கிய “கட்சி சேர” பாடல் நடிகை.. ஆறுதல் தெரிவிக்கும் ரசிகர்கள்!

சமீபத்தில் வெளியாகி இளைஞர்களிடம் பெரும் வைரலான பாடல் ‘கட்சி சேர’. பாடகர்கள் திப்பு மற்றும் ஹரிணி தம்பதியின் மகனான சாய் அபயங்கர் இந்தப் பாடலுக்கு இசையமைத்திருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு சில படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்த சம்யுக்தா விஸ்வநாதன் இந்தப் பாடலில் நடித்திருந்தார். விபத்து ஒன்றில் சிக்கி தான் காயமடைந்திருப்பதாக சம்யுக்தா புகைப்படங்களை தன் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க

Gouri Kishan : என்னது 96 ராம் – ஜானுவுக்கு நிஜமாவே கல்யாணமா? ஷாக்கான நெட்டிசன்ஸ்..

கெளரி கிஷன் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் ஆதித்யா பாஸ்கருக்கு தாலி கட்டுவதைப்போல் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து சமூக வலைதளத்தில் அதிர்ச்சியை கிளப்பி இருந்தார். இருவருக்கும் திருமணமா? என்று ரசிகர்கள் குழப்படைய இந்த புகைப்படம் அவர்கள் இருவரும் இணைந்து தற்போது நடித்திருக்கும் ஹாட் ஸ்பாட் படத்தின் ப்ரோமோஷன் என்று தெரியவந்துள்ளது. மேலும் படிக்க

Aadu Jeevitham Box Office : எல்லா மொழிகளிலும் வசூல் மழை.. பிருத்விராஜின் ஆடுஜீவிதம் – பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

தமிழ் , தெலுங்கு, மலையாளம் , இந்தி என அனைத்து மொழிகளிலும் வசூலை குவித்துள்ளது ஆடு ஜீவிதம் திரைப்படம். ஆடு ஜீவிதம் படம் முதல் நாளில் இந்தியளவில் ரூ 7.45 கோடி வசூல் செய்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. முதல் மூன்று காட்சிகளைக் காட்டிலும் இரவு காட்சிக்கு ரசிகர்களின் வருகையும் அதிகரித்துள்ளதாக இந்த தளம் தகவலை வெளியிட்டுள்ளது.  மேலும் படிக்க

Aadu Jeevitham : படத்தை கெடுத்துவிட்ட சென்சார் வாரியம்.. ஆடுஜீவிதம் படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள்

ஆடு ஜீவிதம் படத்தில் இருந்து சென்சார் வாரியம் சில காட்சிகளை நீக்கியுள்ளதாக படத்தின் இயக்குநர் பிளெஸ்ஸி தெரிவித்துள்ளார். புத்தகத்தில் இடம்பெற்ற நிறைய காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை. இதனால் படத்தின் அனுபவம் சுருங்கிவிடுகிறது. நஜீபின் மன ஓட்டங்களோ அல்லது அவனது அக வயமான உரையாடல்கள் எதுவும் படத்தில் பெரிதாக காட்டப் படவில்லை. இந்த ஒட்டுமொத்த நாவலின் பலமாக கருதப்படுவது நஜீபின் மனதிற்குள் நடக்கும் உரையாடல்களே. மேலும் படிக்க

Prithviraj Sukumaran : 98-இல் இருந்து 68 கிலோ.. ஆடு ஜீவிதம் படத்திற்காக 30 கிலோ எடை குறைத்த பிருத்விராஜ்

ஆடு ஜீவிதம் படத்திற்காக நடிகர் பிருத்விராஜ் 98 கிலோவில் இருந்து 68 கிலோவுக்கு எடை குறைத்துள்ளார். இப்படத்தின் தொடக்கத்தில் வாட்டசாட்டமாக தோன்றும் பிருத்விராஜ் படத்தின் இறுதி காட்சிகள் வயிறு ஒடுங்கி தோன்றி பார்வையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறார். இந்தப் படத்திற்காக பிருத்விராஜ் 98 கிலோவில் இருந்து 68 என 30 கிலோ எடையை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க

மேலும் காண

Source link