Cinema Headlines Today February 2nd Tamil Cinema news today Vijay Political Party Tamizhaga Vetri kazhagam Captain Miller OTT STR 48 Update


Vijay Political Party: அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார் நடிகர் விஜய்! எப்போது போட்டி?
தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நடிகராக உலா வருபவர் நடிகர் விஜய். இவர் அரசியலில் களமிறங்க உள்ளார் என்று தகவல்கள் தொடர்ந்து வெளியாகி உள்ள நிலையில், அவர் இன்று தனது கட்சி பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவர் தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம்(Tamizhaga Vetri kazhagam) என்று அறிவித்துள்ளார். இதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நடப்பு மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அடுத்த சட்டசபைத் தேர்தல் நடைபெறும் 2026ம் ஆண்டு தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என்றும் அறிவித்துள்ளார். மேலும் படிக்க
Tamizhaga Vetri kazhagam: இதுவே என் ஆழமான வேட்கை; நாடாளுமன்ற தேர்தல் கிடையாது: நடிகர் விஜய் பரபரப்பு அறிக்கை
நடிகர் விஜயின் (Vijay) விஜய் மக்கள் இயக்கத்தினை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் இன்று அதாவது பிப்ரவரி 2ஆம் தேதி பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் அரசியல் கட்சியின் பெயரை அறிவித்துள்ளார் நடிகர் விஜய். அதில் தமிழக வெற்றிக் கழகம் (Tamizhaga Vetri kazhagam) என பெயர் முடிவு செய்யப்பட்டு, அதனை சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். இந்நிலையில், விஜயின் தமிழக வெற்றிக் கழகம்  (Tamizhaga Vetri kazhagam)வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பேட்டியிடப்போவதில்லை எனவும், யாருக்கும் ஆதரவில்லை எனவும் விஜய் தெளிவுபடுத்தியுள்ளார். அதே நேரத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாகவும், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள படங்களில் மட்டும் நடித்துவிட்டு, முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  மேலும் படிக்க
Captain Miller OTT: ஓடிடிக்கு வரும் தனுஷின் கேப்டன் மில்லர்: எந்தத் தேதி, ஓடிடி தளம்? முழு விபரம்!

ஜனவரி 12ஆம் தேதி வெளியான இப்படத்தில், பிரியங்கா மோகன், ஷிவராஜ் குமார், சந்தீப் கிஷன், நிவேதா சதீஷ், அதிதி பாலன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜி.வி பிஷகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்த நிலையில், சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்திருந்தது. மேலும் படிக்க

STR 48 Update : இன்று மாலை வெளியாகவிருக்கும் சிம்பு படத்தின் சூப்பர் அப்டேட்!
STR 48 Update : ப்ளட் அண்ட் பாட்டில் என்ற ஹாஷ்டாகுடன் அப்டேட் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம். மேலும் படிக்க
Poonam Pandey Death: நடிகை பூனம் பாண்டே புற்றுநோயால் உயிரிழப்பு: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

புற்றுநோய் காரணமாக பிரபல நடிகை பூனம் பாண்டே உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவரான பூனம் பாண்டே, பிரபல மாடல் அழகி ஆவார். 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பை போட்டியில் வென்றால் நிர்வாணமாக மைதானத்தில் வலம் வருவேன் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் பூனம் பாண்டே. மேலும் படிக்க
 

மேலும் காண

Source link