cinema headlines today february 24th tamil cinema news today Tamannaah Yogi Babu Atlee Mysskin Raghava Lawrence | Cinema Headlines :என்னை பயமுறுத்தும் ஒரு விஷயம்; தமன்னா சொன்னது..புதிய படத்தில் இணையும் யோகிபாபு



Tamannaah Bhatia: என்னை பயமுறுத்தும் ஒரு விஷயம்.. நடிகை தமன்னா சொன்னது எதை தெரியுமா?

மரண பயம் குறித்து தனக்கிருக்கும் அச்சம் பற்றி மிகவும் வெளிப்படையாக தமன்னா பேசி இருந்தார். “இறப்பு என்பது மனிதர்களாகிய நாம் என்றாவது ஒரு நாள் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். அதனால் அதை கண்டு நாம் அச்சம் கொள்ள தேவையில்லை. இருப்பினும் என்னுடைய பெற்றோர் மற்றும்  என்னுடைய அன்புக்குரியவர்களின் இழப்பு குறித்த பயம் எனக்கிருக்கிறது. மக்கள் நம்மை விட்டு பிரிந்து செல்வதை பார்ப்பது அத்தனை எளிதான விஷயமல்ல என கூறி இருந்தார் நடிகை தமன்னா. மேலும் படிக்க

Sanaa Mariyan: புதிய படத்தில் ஜோடியாகும் பொன்னியின் செல்வன் பிரபலங்கள்.. இயக்குநர் யார் மகள் தெரியுமா?

சந்தோஷ், சாரா அர்ஜூன் இருவரும் புதிய படம் ஒன்றில் ஜோடியாக நடிக்கவுள்ளார்கள். இந்த படத்தை சனா மரியான் என்ற அறிமுக பெண் இயக்குநர் இயக்கி தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைக்கிறார். இவர் வேறு யாருமல்ல. தமிழில் 12பி, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே, தாம் தூம் உள்ளிட்ட படங்களை இயக்கிய மறைந்த இயக்குநர் ஜீவாவின் மகளாவார். இந்த படத்தை இயக்குநர் சுந்தர்.சி மற்றும் குஷ்பூவின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முழுக்க முழுக்க ரொமான்ஸ் அடிப்படையில் இந்த படம் தயாராகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

Yogi Babu: ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் இயக்குநருடன் இணையும் யோகி பாபு; படப்பிடிப்பு தீவிரம்

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது அடுத்த படைப்பாக இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், நடிகர் யோகிபாபு நடிக்கும் புதிய திரைப்படத்தை, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் திரைப்படமாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தில், நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்கிறார், லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் படிக்க

Raghava Lawrence: விபத்தில் ரசிகர் மரணம்.. வேதனையுடன் ராகவா லாரன்ஸ் எடுத்த முடிவு!

ரசிகர்களை சந்திக்க இனிமேல் தானே வருவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மேலும் படிக்க

Mysskin: “புத்தகம் படிக்கிறது தான் வேலையே” .. நண்பர்களின் சக்ஸஸ் சீக்ரெட் பற்றி பேசிய மிஷ்கின்!

புத்தகங்கள் படிப்பது பற்றி மிஷ்கின் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அதில், “நான் புத்தகம் படித்து அதில் இருக்கும் விஷயங்களை எல்லாம் படத்தில் வைக்க மாட்டேன். அதில் என்னை எது ஈர்த்ததோ அதை வைத்து புதிதாக ஒன்று படைப்பேன். நாங்கள் எல்லாம் தலைசிறந்த எழுத்தாளர்களின் புத்தகளை படிக்க விரும்புவோம். நான் ஒரு மாதத்திற்கு ஒருமுறை வெற்றிமாறனிடம் பேசுவேன். அப்போது வெற்றி என்ன படிக்கிற? என கேட்பேன். அவனும் என்னிடம் ராஜா நீங்க என்ன படிக்கிறீங்க என கேட்பான்.மேலும் படிக்க

மேலும் காண

Source link