Cinema Headlines today april 15th today Tamil cinema news vijay the greatest of all time director shankar ajith Soundarya Jagadish


தமிழ் திரையுலகமே திரண்டு வந்த ஷங்கர் மகள் திருமணம்.. புகைப்படங்கள் உள்ளே!
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநராகக் கொண்டாடப்படும் இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஐஸ்வர்யாவுக்கு இது இரண்டாவது திருமணமாகும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி, இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் ரஜினி, கமல், விக்ரம், சூர்யா, கார்த்தி, நடிகை நயன்தாரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சிக்கலை உண்டாக்கிய விசில் போடு பாடல்.. நடிகர் விஜய் மீது போலீஸில் புகார்..!
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 68ஆவது திரைப்படமான தி கோட் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது, இந்தப் படத்தில் நடிகர்கள் மோகன், பிரபுதேவா, பிரஷாந்த், நடிகைகள் மீனாட்சி சௌத்ரி, லைலா, சினேகா, நடிகர்கள் வைபவ், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் பாடலான விசில் போடு நேற்று தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகி ஒருபுறம் வரவேற்பையும் மறுபுறம் சர்ச்சையையும் கிளப்பி வருகிறது.
விழிப்புணர்வா இருங்க.. இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்ல.. பா.ரஞ்சித் சொன்ன முக்கியமான விஷயம்..
இயக்குநர் பா. ரஞ்சித் சென்ற வாரம் நடைபெற்ற பி.கே. ரோஸி திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் நிலைபாடு பற்றிய கேள்வி எழுப்பப்பட்டபோது அதற்கு சிரிப்பை பதிலாக அளித்தது இணையத்தில் ரஜினி ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், முன்னதாக நீலம் பண்பாட்டு மையத்தின் நிறைவு விழாவில் பேசிய இயக்குநர் “பா.ரஞ்சித், சும்மா சிரிச்சதுக்கே பல பல அர்த்தங்களை சொல்லுகிறார்கள்,, நம் சிரிப்பு எவ்வளவு வலிமையானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டிய இடமாக உள்ளது” எனப் பேசினார்.
அஜித்துக்கு நடிப்பதில் துளியும் விருப்பமில்லை – இயக்குநர் லிங்குசாமி பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி
தமிழ் சினிமாவின் பிரபல கமர்ஷியல் இயக்குநர்களில் ஒருவரான லிங்குசாமி, நடிகர் அஜித்தை வைத்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாக்கிய திரைப்படம் ஜி. ஆனால், இப்படம் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக பாக்ஸ் ஆஃபிஸில் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் தன் சமீபத்திய நேர்காணல் ஒன்றில், ஜி படம் ஓடாது தனக்கு நன்றாகவே தெரியும் என இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார். 
பிரபல கன்னட தயாரிப்பாளர் சௌந்தர்ய ஜெகதீஷ் தூக்கிட்டு தற்கொலை
பிரபல கன்னடத் தயாரிப்பாளராக இருந்த சௌந்தர்ய ஜெகதீஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னட சினிமாவில் பப்பு, மஸ்த் மஜா மதி, சிநேகிதரு, ராம்லீலா உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்தவர் சௌந்தர்ய ஜெகதீஷ். 55 வயதான சௌந்தர்ய ஜெகதீஷ் நேற்று அதிகாலை தனது அறையில் தற்கொலை செய்துக் கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் காண

Source link